வாட்டர்மெலன் ஜெல்லி- எவ்ளோ சாப்பிட்டாலும் பத்தல என்பார்கள் உங்கள் வீட்டு குட்டிஸ்!

By Asianet Tamil  |  First Published Mar 26, 2023, 4:47 PM IST

வாருங்கள்! தர்பூசணி ஜெல்லி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்


தற்போது தமிழகத்தில் கோடை வெப்பத்தால் பலருக்கும் உடலில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இப்போது உடலை குளிர்ச்சியாக வைக்க தர்பூசணி, இளநீர், நுங்கு என்று போன்றவைகளின் வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. தர்பூசணி ஆனது இந்த சீசனில் மட்டுமே கிடைப்பதால் இதனை தயங்காமல் வாங்கி சாப்பிடலாம். இது உடலுக்கு குளிர்ச்சியாக வைத்து கொள்ளவும், நீச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. தர்பூசணி வைத்து பல்வேறு ஜூஸ், ஐஸ் க்ரீம், கூட்டு என்று பல விதங்களில் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள்.

அந்த வரிசையில் இன்று நாம் தர்பூசணி வைத்து சூப்பரான, குழந்தைகளுக்கு பிடித்தமான ஜெல்லி ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை செய்து வைத்தால் எத்தனை சாப்பிட்டாலும் மீண்டும் வேண்டும் என்று கேட்பார்கள். அதிகமாக செய்தாள் 2 நாட்கள் வைத்து சாப்பிடலாம் என்று நினைத்து செய்தாலும் செய்து முடித்த அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் காலியாகி விடும். 

Latest Videos

undefined

இதனை செய்வது மிகச் சுலபம் . ஆகையால் இதனை எப்போதும் வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். குட்டிஸ் தவிர பெரியவர்களும் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.  வாருங்கள்! தர்பூசணி ஜெல்லி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

தர்பூசணி சாறு- 2 கப்
தேன்- 1 ஸ்பூன்
ஜெலட்டின்- 2 ஸ்பூன் 
சப்ஜா விதை- 1 ஸ்பூன்

 கொளுத்தும் வெயிலுக்கு சில்லென்று ஃபிர்னி ஃபலூடா செய்து சாப்பிடுங்க! எவ்ளோ செய்தாலும் பத்தவே பத்தாது.

செய்யும் விதம்:

முதலில் ஒரு பௌலில் ஜெலட்டின் சேர்த்து தண்ணீர் ஊற்றி சுமார் 5 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். தண்ணீர் கொதிக்கும் போது அதன்மேல் ஜெலட்டின் கிண்ணத்தை வைத்து அது முற்றிலும் கரையும் வரை வைத்திருக்க வேண்டும். (டபுள் பாய்லர் மெதட்)

அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் தர்பூசணி ஜூஸ் சேர்த்து சிறிது தேன் விட்டு பின் அதில் கரைத்து வைத்துள்ள ஜெலட்டின் சேர்த்து வெது வெதுப்பான பின்பு அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும்.

இப்போது உங்களிடம் இருக்கும் மோல்டில் இந்த கலவையை ஊற்றி அதன் மேல் சப்ஜா விதையை போட்டு சுமார் அரை மணி நேரம் வரை வைத்து வைத்து பின் அதனை 1/2 மணி நேரம் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்தால் சூப்பரான தர்பூசணி ஜெல்லி ரெடி! நீங்களும் இந்த கோடை காலத்தில் இதனை செய்து சுவைத்துப் பாருங்கள்! 

click me!