சுகர் இருக்கா? உங்களுக்கான பெஸ்ட் காலை உணவுகள் இதுதான்!!

By Kalai Selvi  |  First Published Jan 23, 2025, 10:08 AM IST

Healthy Breakfast For Diabetes : சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான சில ஆரோக்கியமான காலை உணவுகளின் பட்டியல் இங்கே.


சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதை கட்டுக்குள் வைக்க சரியான உணவு பழக்கங்களை கவனித்துக் கொள்வது மிகப்பெரிய சவாலான விஷயமாகும். சர்க்கரை நோயாளிகள் உணவு பழக்கம் தொடர்பான ஏதாவது ஒரு சிறிய தவறு செய்தால் கூட, அது அவர்களது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே சர்க்கரை நோயாளிகள் தங்களது உணர்வில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். மேலும் இந்த சமயத்தில் சுவையான மற்றும் சத்தான உணவாக எதை சாப்பிட வேண்டும் என்று தேர்வு செய்வது மிகவும் கடினம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த பதிவில் மிகவும் சுலபமான சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த காலை உணவு ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது என்ன இப்போது பார்க்கலாம்.

ராகி ஓட்ஸ் தோசை:

Latest Videos

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 1 கப்
ஓட்ஸ் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
துருவிய இஞ்சி - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மோர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ராகி ஓட்ஸ் தோசை செய்ய முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஓட்ஸை போட்டு லேசாக வறுத்து, ஆற வைத்து பின் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, ஓட்ஸ், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், துருவிய இஞ்சி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு இதில் கொஞ்சம் கொஞ்சமாக மோர் மற்றும் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் தடவி, கலக்கி வைத்த மாவை ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் ராகி ஓட்ஸ் தோசை தயார். இந்த தோசைக்கு நீங்கள் தேங்காய் சட்னி அல்லது கொத்தமல்லி சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

இதையும் படிங்க: சுகர் நோயாளிங்க காலைல சாப்பிடலன்னா உடம்புல என்ன நடக்கும் தெரியுமா?

ராகி ஊத்தப்பம்:

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - முக்கால் கப்
ரவை - அரை கப்
தயிர் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (துருவியது)
உப்பு - தேவையான அளவு
தண்ணீர்  - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

இதற்கு முதலில் ரவை மற்றும் தயிரை நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதனுடன் ராகி மாவு, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும் அரை மணி நேரம் கழித்து ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் தடவி தயாரித்து வைத்த மாவை தோசைக்கல்லில் ஊத்தாப்பம் போல ஊற்றி அதன் மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் மற்றும் துருவிய கேரட் துவ வேண்டும் பிறகு மூடி வைத்து வேக வைக்கவும். ஊத்தப்பம் ஒருபுறம் நன்றாக சிவந்ததும், திருப்பிப்போட்டு மற்றொருபுறமும் நன்றாக சிவக்கும்படி வேக வைத்து எடுக்கவும். இதனுடன் நீங்கள் சட்னி அல்லது சாம்பார் வைத்து சாப்பிட்டால் டேஸ்டாக இருக்கும்.

இதையும் படிங்க:  சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத 6 உணவுகள்..  காரணம் இதுதான்!!

பிற ரெசிப்பிகள்:

சோயா தோசை, ராகி இட்லி, வரகு உப்புமா, கோதுமை தோசை, ராகி களி,  பச்சை பயறு தோசை போன்றவை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த காலை உணவுகள் ஆகும்.

click me!