சில ஆப்பிள்கள் ஏன் ஸ்டிக்கருடன் விற்கப்படுகின்றன? அதில் உள்ள எண்களுக்கு என்ன அர்த்தம்?

By Ramya sFirst Published Jun 15, 2024, 9:09 AM IST
Highlights

நாம் கடைகளில் ஆப்பிள் வாங்கும்போது, அதன் மீது ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம்.. ஆனால் அது எதை குறிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?

நாம் கடைகளில் ஆப்பிள் அல்லது பிற பழங்களை வாங்கும்போது, அதன் மீது ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். கடையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிளை வாங்கி, அது புதியது, விலை உயர்ந்தது, தரமானது என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆம் எனில், இந்த பதிவு உங்களுக்கானது தான். 

ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள் ஏற்றுமதி தரம் வாய்ந்ததாகவும், அதிக விலை கொண்டதாகவும் இருப்பதால், அந்த ஸ்டிக்கர் ஒட்டியதாக குறிப்பிட்டு விற்பனையாளர்கள் விற்பனை செய்கின்றனர். உண்மையில், ஸ்டிக்கர் கெட்ட பகுதியை மறைப்பதற்கோ அல்லது அழுகலை மறைப்பதற்கோ ஒட்டப்படவில்லை. ஆனால் ஏன் ஆப்பிள்கள் மீது ஸ்டிக்கர்கள் ஒட்டபப்டுகிறது.  99% பேருக்கு இது தெரியாது. ஆப்பிள் மட்டுமல்ல, ஆரஞ்சுகளும் இப்போது ஸ்டிக்கர்களுடன் விற்கப்படுகின்றன.

Latest Videos

Ragi Idli : காலை டிபனுக்கு ஒரு முறை இந்த இட்லி செஞ்சு கொடுங்க.. நன்மைகள் எக்கச்சக்கம்!

ஸ்டிக்கர்களுடன் கூடிய பளபளப்பான ஆப்பிள்களைப் பார்க்கும் பெரும்பாலான மக்கள் அவை விலை உயர்ந்தவை என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த ஸ்டிக்கர் ஆரோக்கியத்துடன் நேரடியாக தொடர்புடையது என்று உங்களுக்கு தெரியுமா?. எனவே நீங்கள் ஒரு ஆப்பிள் வாங்கும் போது, ஆப்பிளில் இருக்கும் ஸ்டிக்கரைப் படியுங்கள்.

ஆப்பிளில் இருக்கும் ஸ்டிக்கரில் பழத்தின் தரம் மற்றும் அது எப்படி வளர்க்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் உள்ளன. சில ஸ்டிக்கர்களில் நான்கு இலக்க எண்கள் இருக்கும். அதாவது அவை 4026 அல்லது 4987 போன்ற எண்கள் இருக்கும். இந்தப் பழங்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்பட்டவை என்பதைக் குறிக்கிறது. இந்தப் பழங்களில் பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பழங்கள் மலிவானவை, நீங்கள் அவற்றை சாப்பிட்டால், நீங்கள் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் உள்ள பழங்களை வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

சில பழங்களில் 5 இலக்க எண்கள் இருக்கும். அதாவது 84131, 86532 போன்ற 8ல் தொடங்கும் இந்தப் பழங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை என்று அர்த்தம். இந்த பழங்கள் இயற்கையானவை அல்ல. பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட பழங்களை விட அவை விலை சற்று அதிகம். 

Lemon : லெமன் சாப்பிட்டால் இவ்வளவு சைடு எஃபெக்ட் இருக்கா..? தெரிஞ்சுட்டு சாப்பிடுங்கப்பா..!

சில பழங்களில் 9 இல் தொடங்கும் 5 இலக்க குறியீடு உள்ளது. 93435 என்று சொன்னால், பழம் இயற்கை முறையில் விளைந்தது என்றும் பூச்சிக்கொல்லிகள் அல்லது ரசாயனங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும் அர்த்தம். பாதுகாப்பான பழம் என்றாலும் விலை கொஞ்சம் அதிகம். ஆனால் அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஒவ்வொரு ஸ்டிக்கருக்கும் வெவ்வேறு அர்த்தம் இருந்தாலும், சிலர் அதை பயன்படுத்தி போலி ஸ்டிக்கர்கள் தயாரித்து பழங்களில் ஒட்டுகின்றனர். ஏற்றுமதித் தரம், உயர்தரம், பிரீமியம் ரகங்கள் என்று கூறி வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகப் பணம் வசூலிக்க இதுபோன்ற போலி ஸ்டிக்கர் பயன்படுத்தப்படுகிறது. எனவே ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

click me!