Knee Pain: மூட்டு வலி இருக்கா? சம்மணமிட்டு உட்கார்ந்தால் ஆபத்து! நிபுணர்கள் சொல்வதை பாருங்க!

Published : Sep 19, 2026, 08:51 PM IST
knee pain

சுருக்கம்

Knee Pain: நமக்கு சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் இது மூட்டுகளில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து பேசுவது, சாப்பிடுவது அல்லது பூஜை செய்வது நம் ஊர்களில் ரொம்பவே சாதாரணமான ஒரு விஷயம். ஆனால், மூட்டு வலி, ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் அல்லது முடக்கு வாதம் (Rheumatoid arthritis) உள்ளவர்களுக்கு ஒரு சந்தேகம் வரும் - இப்படி சம்மணமிட்டு உட்காரலாமா? எலும்பியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ஆர்த்ரைடிஸ் பிரச்சனை இருந்தால் தரையில் சம்மணமிட்டு உட்காருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சம்மணமிட்டு உட்கார்ந்தால் ஆபத்து

இதற்கு முக்கிய காரணம், இப்படி உட்காரும்போது உடலின் முழு எடையும் மூட்டுகளில் விழுகிறது. முழங்கால் சுமார் 120 முதல் 140 டிகிரி வரை மடங்குவதால், மூட்டுகளுக்குள் இருக்கும் குருத்தெலும்பு மீது பயங்கர அழுத்தம் ஏற்படுகிறது. ஏற்கனவே குருத்தெலும்பு தேய்மானம் அடைந்தவர்களுக்கு, இந்த அழுத்தத்தால் வலி, வீக்கம் மற்றும் மூட்டுகள் இறுக்கமடையும் பிரச்சனை பல மடங்கு அதிகரிக்கும்.

சம்மணமிட்டு உட்கார்ந்தால் மூட்டுகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால், ஆர்த்ரைடிஸ் உள்ளவர்களுக்கு இது நேர்மாறான விளைவை ஏற்படுத்தும். நீண்ட நேரம் இப்படி உட்கார்ந்தால் மூட்டுகளுக்கு ரத்த ஓட்டம் குறையும். இதனால் கால் மரத்துப்போகும், எழுந்திருக்கும்போது கடுமையான வலி ஏற்படும்.

Egg Yolk: முட்டை மஞ்சள் கரு சாப்பிடுவது இதயத்திற்கு ஆபத்தா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

மூட்டு வீக்கம் உள்ளவர்கள்

குறிப்பாக, மூட்டு வீக்கம் உள்ளவர்கள் அல்லது மாடிப்படிகளில் ஏற சிரமப்படுபவர்களுக்கு இந்த நிலை மிகவும் ஆபத்தானது. இதனால் மூட்டு தேய்மானம் இன்னும் வேகமாக நடக்கும். சில நேரங்களில் மூட்டு 'லாக்' ஆகிவிடும் அபாயமும் உள்ளது. முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு மூட்டுகளில் ஏற்கனவே வீக்கம் இருக்கும், அவர்கள் தரையில் உட்கார்ந்தால் வீக்கம் இன்னும் அதிகமாகும்.

அப்படியானால் ஆர்த்ரைடிஸ் நோயாளிகள் எப்படி உட்கார வேண்டும்? நாற்காலியில் உட்காருவதுதான் சிறந்தது என மருத்துவர்கள் எப்போதும் பரிந்துரைக்கிறார்கள். நாற்காலியில் உட்காரும்போது முழங்கால் 90 டிகிரி கோணத்தில் இருக்கும், இதனால் மூட்டுகளில் அழுத்தம் குறையும். கால்கள் தரையில் சமமாக படும்படியும், முழங்கால் இடுப்பை விட சற்று கீழே இருக்கும்படியும் நாற்காலியின் உயரம் இருக்க வேண்டும். ஒருவேளை தரையில் உட்கார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், கால்களை நீட்டியபடியோ அல்லது சுவரில் சாய்ந்தபடியோ உட்காரலாம்.

Back and Neck Pain: முதுகு, கழுத்து வலி அதிகரிக்க இதுதான் காரணமா? தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்

கால்களை நீட்டி உட்காருவது நல்ல மாற்று வழி

ஆனால், ரொம்ப நேரம் அப்படி உட்காரக் கூடாது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க வேண்டாம். ஒவ்வொரு 30-40 நிமிடங்களுக்கும் எழுந்து கொஞ்சம் நடக்கவும். முழங்காலுக்கு அடியில் தலையணை வைத்து கால்களை நேராக நீட்டி உட்காருவதும் ஒரு நல்ல மாற்று வழி. சரியான முறையில் உட்காருவது மட்டுமின்றி, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது, முறையான பிசியோதெரபி மற்றும் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுவது மூட்டு வலியை குறைக்க மிகவும் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இயற்கையின் அமிர்தம்: கற்றாழையின் வியக்கத்தக்க மருத்துவ அதிசயங்கள்!
Neer Dosa Recipe: வாயில் வைத்தால் கரையும் நீர் தோசை.. 5 டிப்ஸ் போதும்!