Curry leaves: ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை: இரத்த உற்பத்திக்கு இதுதான் பெஸ்ட்!

By Dinesh TGFirst Published Nov 25, 2022, 10:39 AM IST
Highlights

உணவுத் தட்டில் இருந்து கறிவேப்பிலை ஒதுக்கப்பட்டு, குப்பைத் தொட்டிக்குத் தான் செல்கிறது. கறிவேப்பிலைக்கு கறிவேம்பு மற்றும் கறியபிலை போன்ற வேறு பெயர்களும் உள்ளது.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில்,  சமையலில் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை மிக முக்கிய பங்காற்றுகிறது. இது தலைமுடி ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது. ஆனால், இன்று பலரும் கறிவேப்பிலையை தவிர்த்து வருகின்றனர். உணவுத் தட்டில் இருந்து கறிவேப்பிலை ஒதுக்கப்பட்டு, குப்பைத் தொட்டிக்குத் தான் செல்கிறது. கறிவேப்பிலைக்கு கறிவேம்பு மற்றும் கறியபிலை போன்ற வேறு பெயர்களும் உள்ளது.

கறிவேப்பிலை

வெறுமனே வாசனைக்காக மட்டும் சமையலில் கறிவேப்பிலையை சேர்ப்பதில்லை. அதில் உள்ள மருத்துவ குணங்கள் நம் உடலுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தான். பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ள கறிவேப்பிலையை வீணாக்கி விடாமல் சாப்பிடுவது தான் மிகவும் நல்லது. கறிவேப்பிலையை சாப்பிட பிடிக்கவில்லை என்றால், அதனை காய் வைத்து பொடியாக்கி உணவில் சேர்த்து விடு வேண்டும். இப்படிச் செய்வதால், கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் நமக்கு கிடைக்கும்.

Green Chilli: பச்சை மிளகாயை அடிக்கடி சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

கறிவேப்பிலையின் நன்மைகள் 

  • இரத்தக்குறைவு நோயை குணப்படுத்த கறிவேப்பிலை உதவி செய்கிறது. பழங்களோடு, கறிவேப்பிலை பொடியையும் சேர்த்து சாப்பிட்டால் குறைந்திருக்கும் இரத்த உற்பத்தி மிக விரைவாக அதிகரிக்கும்.
  • கறிவேப்பிலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேராது.

தலைமுடி வளர்ச்சி

  • தலைமுடி வளர்ச்சிக்கு மிகச் சிறந்த உணவுப் பொருள் கறிவேப்பிலை என்பது அனைவரும் அறிந்ததே. முடி வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பள்ளிப் பருவத்திலேயே ஏற்படும் இளநரைப் பிரச்சனைக்கும் கறிவேப்பிலை சிறந்த தீர்வாக அமையும்.
  • உணவு வகைகளில் சேர்த்துக் கொள்ளப்படும் கறிவேப்பிலைகளை, உணவுடன் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அதனுடைய சாரம் செரிமானப் பிரச்சனைகளை சரிசெய்து, செரிமானப் பாதையை மேம்படுத்துகிறது.
  • நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவதுண்டு. மேலும் கை, கால் வலி மற்றும் கண்பார்வை குறைபாடு ஏற்படும். இவர்கள், அடிக்கடி உணவில் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
click me!