பலருக்கும் இருக்கும் பொதுவான உடல்நலப் பிரச்னைகளில் ஒன்று தலைவலி. மற்ற நோய் பாதிப்புகள் நமக்கு எப்போது வரும் என்று தெரியாது. ஆனால் தலைவலி மட்டும் எப்போது ஏற்படும் என்பது பலருக்கும் துல்லியமாக தெரிந்திருக்கும்.
பரபரப்பான வாழ்க்கை நடைமுறை காரணமாக பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளன. அப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் போது நமக்கு தெரியும் அறிகுறி தான் தலைவலி. எனினும் இன்றைய காலக்கட்டத்தில் தலைவலி பொதுவாகிவிட்டது. மன அழுத்தம், நீரிழப்பு, கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட காரணங்கள் தான் தலைவலி ஏற்படுவதற்கு முதன்மையான காரணங்களாக உள்ளன. இந்த மூன்று பாதிப்புகள் இல்லாத மனிதர்களே மிகவும் குறைவு தான். அதனால் தலைவலி எல்லோருக்கும் இருக்கும் பிரச்னையாகிவிட்டது. அதற்கு தீர்வை நாட விரும்புபவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை நாடுகின்றனர். ஆரம்பத்தில் இருந்து தற்காலிக தீர்வை வழங்கினாலும், அதனால் பிற்காலத்தில் ஒட்டுமொத்த பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் உடல்நலத்தை பாதிக்காமல் வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து எளிதாக நிவாரணம் அளிக்கும். அதற்கான தகவல்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
மசாஜ் தெரப்பி
மசாஜ்கள் செய்யப்படும் போது இறுக்கமான தசைகள் எளிதாகி விடுகின்றன. மேல் உடலில் உள்ள மன அழுத்தம் மற்றும் பதற்றம் தலைவலியை ஏற்படுத்துகிறது. தசைப்பிடிப்பு அல்லது கடுமையான உடற்பயிற்சியின் காரணமாக நிகழலாம். தலைவலியை ஏற்படுத்தும் இறுக்கமான மசாஜ் செய்யும் போது நாள்பட்ட வலி குறைந்துவிடுகிறது. இதை தொடர்ந்து செய்வதன் மூலம் வலி நிவாரண மாத்திரைகள் தேவைப்படாமல் போய்விடும்.
லாவெண்டர் எண்ணெய்
முக்கியமான சேர்க்கைகள் கொண்டு லாவெண்டர் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதை வைத்து மசாஜ் செய்யப்படும் போது தலைவலியால் ஏற்படும் துன்பகரமான அறிகுறிகள் நீங்கிவிடுகின்றன. மேலும் உங்கள் மனதில் அமைதியும் நிதானமும் ஏற்படும். ஒரு குவளை எண்ணெய்யை எடுத்து, வலி கொண்ட இடத்தில் மசாஜ் செய்யவும். இதன்மூலம் ஆரம்பத்தில் வலியை சமாளிக்கக்கூடிய பக்குவம் வரும். அதை தொடர்ந்து படிப்படியாக வலி குறையும்.
மூச்சுப் பயிற்சி
பதற்றம் மற்றும் மன அழுத்தம் காரணமாக தலைவலி அதிகமாக ஏற்படுகிறது. இது நரம்புகளை பாதிக்கச் செய்து, சுவாசப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதை தவிர்க்க சுவாசப் பிரச்னைகளை அடிக்கடி செய்யலாம். இதனால் நரம்புகள் வலுப்பெற்று, மன அழுத்தம் குறையும். ஒரு அமைதியான இடத்தில் உட்கார்ந்து, மென்மையாக கவனிக்கத் துவங்கி மூச்சை கவனித்து பயிற்சி செய்யுங்கள். இதன்மூலம் தசை இறுக்கம் குறைந்து, ஒரு நிதானமான உணர்வு உங்களுக்குள் ஏற்படும்.
Betel leaves: தினமும் 2 வெற்றிலை சாப்பிட்டால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் என்னென்ன?
சூடாக ஒரு தேநீர்
ஒரு கப் சூடான தேநீரை பருவது நல்ல ஆறுதலை தரும். அந்த தேநீரில் இஞ்சி, இலவங்கம் போன்ற பொருட்களை சேர்த்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் சூடாக டீ குடிப்பதன் மூலம் தசைகளுக்குள் இருக்கும் வெப்பம் தளருகிறது. அதனால் மனதில் அமைதி ஏற்படுகிறது. கெமோமில், டேன்டேலியன் மற்றும் இஞ்சி ஆகியவற்றால் செய்யப்பட்ட மூலிகை தேநீர் தலைவலியை போக்குவதற்கு நல்ல முறையில் பலன் தருவதாக கூறப்படுகிறது.
ஐஸ் ஒத்தடம்
தலைவலி இருக்கும் இடங்களில் ஐஸ் பேக் கொண்டு ஒத்தடம் வையுங்கள். இதன்மூலம் வலி இருக்கும் இடத்தில் தோல்கள் தளர்ந்து, இறுக்கமடைந்து இருந்த சருமம் தளர்ந்துவிடும். அதனால் எப்போதும் உங்களுடைய ஃப்ரீசரில் ஐஸ் பேக் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். ஒரு ஐஸ் பேக்கைப் பெற முடியாவிட்டால், ஒரு நாப்கின் அல்லது குளிர்ந்த நீரில் கழுவப்பட்ட துவைக்கும் துணி ஒத்தடம் வைக்க பயன்படுத்தலாம்.