Betel leaves: தினமும் 2 வெற்றிலை சாப்பிட்டால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் என்னென்ன?

By Dinesh TGFirst Published Nov 24, 2022, 6:28 PM IST
Highlights

வெற்றிலையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், நம் உடலில் உள்ள வயிற்றுப் புண்கள், அல்சர் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு நிவாரணம் தருகிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வகையில் வெற்றிலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.
 

பல காலங்களுக்கு முன்னர், மதிய உணவிற்குப் பிறகு, வெற்றிலைப் போடுவது வழக்கமாக இருந்தது. இது தமிழர்களின் மிக முக்கிய பண்பாட்டு வழக்கம். இதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை. வெற்றிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, அயோடின், பொட்டாசியம் மற்றும் நிகோடினிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது.

வெற்றிலையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், நம் உடலில் உள்ள வயிற்றுப் புண்கள், அல்சர் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு நிவாரணம் தருகிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வகையில் வெற்றிலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

வெற்றிலையில் உள்ள சில பதார்த்தங்கள் செரிமான பிரச்சனைகள் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

உடல் எடை அதிகரிப்பால், உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவானது அதிகமாக இருக்கும். இவர்கள் வெற்றிலையை சாப்பிடுவதன் காரணமாக, உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருக்கலாம்.

நாவூறும் செட்டிநாடு முட்டை தொக்கு செய்வது எப்படி?

மூட்டு வலியில் அவதிப்படுபவர்கள், வெற்றிலை இலைகளை எடுத்துக் கொண்டு, அதனை நன்றாக அரைத்தவுடன் வரும் சாற்றை வலியிருக்கும் இடத்தில் தடவி விட வேண்டும். இது மூட்டுவலிக்கு நிவாரணத்தை அளிக்கிறது. இவ்வாறு தினந்தோறும் செய்யும் போது எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாமல், வலிகள் தீரும்.

சிலருக்கு வயிற்றில் உள்ள புண்கள் மற்றும் வாயில் இருக்கும் சில பக்டீரியாக்களால் வாயிலிருந்து துர்நாற்றம் வீசும். இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள், தினந்தோறும் வெற்றிலையை வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் வாய் துர்நாற்றம் இல்லாமல் போகும்.

ஆண்மை குறைவு பிரச்சினை உள்ளவர்கள், தினந்தோறும் இரண்டு முறை வெற்றிலையை எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. ஏனென்றால், இதிலிருக்கும் சில பதார்த்தங்களுக்கு இரத்த நாளங்களை சீரமைத்து, ஆண்மை குறைப்பாட்டை சரி செய்யும் திறன் உள்ளது.

click me!