க்ரிஸ்பி கோபி 65 செய்து சாப்பிடலாம் வாங்க!

By Dinesh TGFirst Published Nov 24, 2022, 5:37 PM IST
Highlights

இன்று நாம் க்ரிஸ்பியான கோபி 65 ரெசிபியை சுவையாகவும், சுலபமாகவும் வீட்டில் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சத்துள்ள உணவுகளாக எடுத்துகொண்டால் தான் நாம் ஆரோக்கியமான ஒரு வாழ்வை மேற்கொள்ள முடியும். சத்துள்ள உணவுகள் என்று குறிப்பிடும் போது காய்கறிகள் நமக்கு பெரிதும் துணை புரிகிறது.காய்கறிகள் நமக்கு பல வகைகளில் நன்மையை அளிக்கின்றன.அந்த வகையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலி ஃப்ளவர் வைத்து ஒரு ரெசிபியை இன்று நாம் காண உள்ளோம். 

காலி ஃப்ளவரில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளதால் இது உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தர வேண்டும் என்று கூறும் போது,காலி ஃப்ளவர் ரைட் சாய்ஸ்.

காலி ஃப்ளவர் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கும் என்பதால் அடிக்கடி இதனை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இன்று நாம் க்ரிஸ்பியான கோபி 65 ரெசிபியை சுவையாகவும், சுலபமாகவும் வீட்டில் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 1
மைதா -2 ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 4 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் காலிஃப்ளவரை அலசி அதன் தண்டு பகுதியை நீக்கி விட்டு , ஒரே மாதிரியான துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி,கொதிக்க வைக்க வேண்டும்.கொதிக்கும் தண்ணீரில் அரிந்து வைத்துள்ள காலிஃப்ளவரை போட்டு சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். 

அடுத்து ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவரை போட்டு அதில் மைதா,கார்ன் ஃப்ளார், அரிசி மாவு,மிளகாய் தூள்,பேக்கிங் சோடா, கரம் மசாலாத் தூள் , இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

பின் அந்த கலவையை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரத்திறகு பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பிறகு, ஊற வைத்துள்ள காலி ஃப்ளவரை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி போட வேண்டும். 

இப்போது அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து, காலி ஃப்ளவரை பொரித்து எடுத்தால் க்ரிஸ்பியான கோபி 65 ரெடி!

click me!