இந்த மழைக்காலத்தில் சுட சுட மொறு மொறுவென்று செய்து கொடுங்கள். சத்தமில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டு மறுமுறை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வாங்க! இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பள்ளி முடித்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் சூப்பரான ஒரு ரெசிபியை இன்று நாம் காண உள்ளோம். குழந்தைகளுக்கு பிடித்த உணவு வகைகளில் கார்னும் ஒன்று . மேலும் அது பல ஆரோக்கிய நலனையும் தருகிறது. அப்படிப்பட்ட கார்ன் மற்றும் சீஸ் வைத்து அட்டகாசமான சுவையில் கார்ன் சீஸ் பிரட் டோஸ்ட் வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதனை இந்த மழைக்காலத்தில் சுட சுட மொறு மொறுவென்று செய்து கொடுங்கள். சத்தமில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டு மறுமுறை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வாங்க! இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
undefined
கார்ன் சீஸ் டோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் -1 கப்
சீஸ் - 1/2 கப்
பிரட் - 6 ஸ்லைஸ்கள்
மிளகுத் தூள் - 1/2ஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1 ஸ்பூன்
பட்டர் - 1 ஸ்பூன்
மைதா - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1/4 கப்
கேப்ஸிகம் - 1/4 கப்
கெட்டி பால் - 3/4 கப்
உப்பு - தேவையான அளவு
வீட்ல பிரட் அண்ட் பன்னீர் இருக்கா? வெறும் 10 நிமிடத்தில் அருமையான சாண்ட்விச் செய்யலாம் வாங்க!
செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் கேப்ஸிகம் ஆகியவற்றை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்வீட் கார்னை வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்,பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின்னர் ,பொடியாக அரிந்த கேப்ஸிகம் சேர்த்து வதக்கி விட வேண்டும்.
அடுத்து அதில் வேக வைத்து எடுத்துள்ள ஸ்வீட் கார்ன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட்டு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
அடுப்பில் மற்றொரு கடாய் வைத்து, அதில் பட்டர் சேர்த்து உருக வைக்க வேண்டும். பட்டர் உருகிய பின் கடாயில் மைதா சேர்த்து கொஞ்சம் கிளறி விட்டு, பின் கெட்டி பால் ஊற்றி ,சாஸ் பதத்தில் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது கடாயில் சீஸ் சேர்த்து நன்றாக கிளறி விட்டு, அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும். பின் பிரட் ஸ்லைஸ்களின் மேல் நெய் தடவி வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் தோசைக்கல் வைத்து , நெய் தடவி,பிரட்களை ஒவ்வொன்றாக டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் டோஸ்ட் செய்த பிரட் ஸ்லைஸ்களின் மீது கார்ன் கலவையை வைத்து ஸ்ப்ரெட் செய்து விட்டு மேற்பரப்பில் சில்லி ப்ளேக்ஸ் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து பரிமாறினால் அசத்தலான சுவையில் கார்ன் சீஸ் டோஸ்ட் ரெடி!