நாவூறும் செட்டிநாடு முட்டை தொக்கு செய்வது எப்படி?

By Dinesh TG  |  First Published Nov 24, 2022, 12:50 PM IST

இன்று நாம் செட்டிநாடு ஸ்டைலில் ருசியான முட்டை தொக்கு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.


வழக்கமாக முட்டை வைத்து பொரியல்,பொடிமாஸ்,ஆம்லெட், கிரேவி என்று பல விதங்களில் முட்டையை சமைத்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று நாம் செட்டிநாடு ஸ்டைலில் ருசியான முட்டை தொக்கு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

இதனை ஒரு முறை செய்து பாருங்கள், இதன் ருசிக்கு அனைவரும் அடிமை ஆகி விடும் அளவிற்கு இதன் சுவை மிக பிரமாதமாக இருக்கும். மேலும் இதனையே அடிக்கடி செய்யுமாறு வீட்டில் இருப்புவர்கள் நிச்சயமாக கேட்பார்கள்.
சூடான சாதத்தில் இதனை சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். அட டடா என்று உச்சு கொட்டி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும். 

Tap to resize

Latest Videos

தேவையான பொருட்கள்:

முட்டை – 6 
வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
புளி சாறு – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் -3 ஸ்பூன்
மிளகுத் தூள் 3 ஸ்பூன் 
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் –தேவையான அளவு 
மல்லித்தழை – சிறிது (நறுக்கியது)

உடலுக்கு வலிமை சேர்க்கும் "முருங்கைக்காய் மசாலா"செய்வது எப்படி ? பார்க்கலாம் வாங்க!

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் முட்டைகளை போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆறிய பிறகு குக்கரை திறந்து முட்டைகளின் ஓடு நீக்கி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 

வெங்காயத்தை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி, புளிக் கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து,அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட வேண்டும். 

பிறகு கடாயில், எடுத்து வைத்துள்ள புளிச்சாறு சேர்த்து கொஞ்சம் மிக்ஸ் செய்து விட வேண்டும்.அடுத்து அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள,மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இப்போது அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கிட்ட தட்ட 7 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். 

கலவை கொஞ்சம் கெட்டியாக மாறிய பிறகு, வேக வைத்து எடுத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டி கடாயில் போட வேண்டும். பின் கலவையானது முட்டையின் மேல் கலக்கும் படி நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக வெட்டி வைத்துள்ள மல்லித் தழையை சேர்த்து இறக்கினால் சூப்பரான செட்டிநாடு முட்டை தொக்கு ரெடி!!! 

click me!