Grape water: திராட்சை தண்ணீரில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?

By Dinesh TGFirst Published Nov 24, 2022, 7:28 PM IST
Highlights

எந்த நேரத்திலும் உலர் பழங்களை சாப்பிடலாம் என்பது இதன் சிறப்பாகும். இப்போது, உலர் பழங்களில் முக்கியமான உலர் திராட்சையின் பயன்கள் குறித்து பார்ப்போம்.

உலர் பழங்களை அடிக்கடி உட்கொள்வதன் மூலமாக பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை நாம் பெற முடியும். உலர் பழங்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடும் போது, அதன் நன்மைகள் இன்னும் அதிகரிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உலர் பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். எந்த நேரத்திலும் உலர் பழங்களை சாப்பிடலாம் என்பது இதன் சிறப்பாகும். இப்போது, உலர் பழங்களில் முக்கியமான உலர் திராட்சையின் பயன்கள் குறித்து பார்ப்போம்.

உலர் திராட்சை

எப்போதுமே உலர் பழங்களில் முதலிடத்தில் இருப்பது என்றால் அது திராட்சை தான். இதில் உலர் திராட்சை பெரும்பாலாக கருப்பு மற்றும் மஞ்சள் என இரு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி, சி மற்றும் போலிக் அமிலம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளது. உலர் திராட்சையை ஊறவைத்து, அந்த நீரை குடித்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். அவ்வகையில் இந்த உலர் திராட்சை ஊறவைத்த நீரை எப்படி குடிப்பது மற்றும் அதன் பலன்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.   

எப்படி எடுத்து கொள்ள வேண்டும்? 

  • தினந்தோறும் 100 முதல் 150 கிராம் திராட்சையை உட்கொள்வது மிகவும் நல்லது.
  • முதலில் உலர் திராட்சையை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். பிறகு, அவற்றை சுத்தமான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
  • உலர் திராட்சையை இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும்ம். பிறகு ஊறவைத்த தண்ணீரை காலையில் எழுந்ததும் குடித்துவிட்டு, திராட்சையை மென்று சாப்பிட்டு வர வேண்டும்.

Betel leaves: தினமும் 2 வெற்றிலை சாப்பிட்டால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் என்னென்ன?

உலர் திராட்சையின் நன்மைகள்

  • திராட்சை தண்ணீரை தினந்தோறும் குடித்து வந்தால் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாய்வுப் பிரச்சனைகள் நீங்கி விடும்.
  • தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை தண்ணீரை குடித்து வந்தால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும்.
  • முக சுருக்கங்களை நீக்குவதற்கு, திராட்சை தண்ணீர் பயனுள்ளதாக அமையும். இந்த தண்ணீரை குடிப்பதால், சருமம் அழகாக மாறும்.
click me!