காம உணர்வும், ஆண்மையும் அதிகரிக்க இந்த கீரையை கண்டிப்பாக சாப்பிடுங்க..!!

Published : Aug 05, 2023, 01:44 PM ISTUpdated : Aug 05, 2023, 01:48 PM IST
காம உணர்வும், ஆண்மையும் அதிகரிக்க இந்த கீரையை கண்டிப்பாக சாப்பிடுங்க..!!

சுருக்கம்

கானாம் வாழையில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக ஆண்மை குறைவு உள்ளவர்களுக்கு இது ஒரு அதிசய மருந்தாகும். இதனை சமைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

கானாம் வாழை இலையின் பிறப்பிடம் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். தமிழ்நாட்டில் இது ஈரமான இடங்கள் கடற்கரை அடுத்த நிலங்களில் தானாக வளரும் சிறு செடி ஆகும். குறிப்பாக இது பயிர்களில் களையாக வளரக்கூடியது. இதன் இலைகள் முட்டையாக ஈட்டி வடிவில் இருக்கும். மேலும் இதன் இலைகள் மென்மையாக பச்சையாக தண்ணீர் உள்ள சதைப்பற்றை கொண்டிருக்கும். இது தரையோடு படர்ந்து மேல் நோக்கி வளரும் சிறு செடி ஆகும். இதில் உள்ள மலர்கள் நீல நிறமாக சிறிதாகக் காணப்படும். 

இவற்றின் விதை மூலம் இன விருத்தியாகிறது. இந்த கீரையை சீனா மக்கள் மூலிகையாகப் பயன்படுத்தினர். மேலும் பாக்கீஸ்தானில் தோல் வியாதியால் ஏற்படும் வீக்கம் குறைக்க இதனை பயன்படுத்தினர். அதுபோல் இந்த இலையை தொழுநோய் புண்களை சுத்தப்படுத்தவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தினர். தீப்புண் குணமாகவும் இதைப் பயன்படுத்தினர்.

இதையும் படிங்க: ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய அரிசி.. அதுவும் திருமணத்திற்கு தயாராகும் ஆண்கள் கண்டிப்பாக சாப்பிடணும்..! ஏன்?

தாது விருத்தியாகும்:
முதலில் கானாம் வாழை கீரையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அவற்றுடன் அரைக் கைப்பிடியளவு முருங்கைப் பூ மற்றும் துவரம் பருப்பு சேர்த்து கூட்டு வைக்கவும். இவற்றுடன் தேவையான அளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம். பின் இதனை சாதத்துடன் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும் மேலும் இரத்த ஓட்டம் நன்கு உற்பத்தியாகும்.

ஆண்மை அதிகரிக்கும்:
கானாம் வாழைக் கீரை, தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் ஆகியவற்றை 100 கிராம் அளவு எடுத்து பொடியாக்கி தினமும் காலை மாலை என இரு வேலையும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், விந்து முந்துதல் பிரச்சனையும் தீரும்.

அதுபோல், இந்த கீரையை கொட்டைப் பாக்குடன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் காம உணர்வும், ஆண்மையும் அதிகரிக்கும். மேலும் இந்த கீரைச் சாறில் சிறிதளவு கசகசாவை ஊற வைத்து அரைத்து கொள்ள வேண்டும். பின் அவற்றை தேனுடன் கலந்து சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்குமாம்.

காய்ச்சல் குணமாகும்:
எந்த வகையான காய்ச்சல் ஆனாலும் சரி அவற்றை முற்றிலும் குணமாக கானாம்வாழை கசாயம் உதவுகிறது. இந்த கசாயம் செய்ய முதலில் பாத்திரம் ஒன்றில் ஒரு கைப்பிடி அளவு கானாம் வாழை கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும். பின் அதனை காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும். மேலும் இந்த 
கீரையுடன் சிறிது மிளகு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குளிர் ஜூரம் உடனடியாகக் குணமாகும்.

உடல் சூடு குறையும்:
உடல் சூடு குறைய இந்த கீரையை கைப்பிடி அளவு அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு உடனே குறையும் இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலும் வெட்டைச் சூடும் குறையும். மேலும் இந்த கீரையுடன் வேப்பந்துளிர், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும் மற்றும் உடல் இரத்தம் சுத்தமாகும்.

இரத்த பேதி குணமாகும்:
இரத்த பேதி குணமாக இந்த கானாம் வாழை கீரையை கைப்பிடி அளவு எடுத்து கொள்ள வேண்டும். இவற்றுடன் அருகம் புல்லை சேர்த்து மை போல அரைத்து கொள்ள வேண்டும். பின் இவற்றை பசும்பாலில் கலந்து காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி குணமாகும்.

வெள்ளைப் போக்கு:
இந்த இலையுடன் சம அளவு கீழாநெல்லியை எடுத்து மையாக அரைத்துத் தயிருடன் நெல்லிக்காய் அளவு காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப் போக்கு தீரும்.

இதையும் படிங்க:  ஆடு பாலில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா? தெரிஞ்சா கண்டிப்பா இனி குடிப்பீங்க..!!

அதுபோலவே, இலையை அரைத்துக் கட்டப் படுக்கைப் புண், மார்பு காம்பைச் சுற்றி போட்டால் புண்கள் தீரும். இந்த இலையைக் கசக்கி முகப்பருவிற்கு போட்டு வந்தால் முகப்பரு நீங்கும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake
பழநி பஞ்சாமிர்தம் கப் கேக்| நோ மைதா| நோ சர்க்கரை| 10 minutes easy healthy snacks