ஹீலிங் சிகிச்சை சரியா? தவறா? உயிரை காவு வாங்கியதின் அதிர்ச்சி பின்னணி...!

First Published Aug 4, 2018, 5:11 PM IST
Highlights

சமீபத்தில் ஹீலிங் என்ற வார்த்தை தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சமீபத்தில் ஒரு பெண்ணின் கணவர் வீட்டிலேயே தன்னுடைய மனைவிக்கு பிரசவம் பார்த்து, அந்த பெண்ணின் இறப்பிற்கு காரணமாகிவிட்டார்.

சமீபத்தில் ஹீலிங் என்ற வார்த்தை தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சமீபத்தில் ஒரு பெண்ணின் கணவர் வீட்டிலேயே தன்னுடைய மனைவிக்கு பிரசவம் பார்த்து, அந்த பெண்ணின் இறப்பிற்கு காரணமாகிவிட்டார். அவரை போலீசார் விசாரித்து வரும்  வேலையில், நேற்றொருவர் தன்னுடைய மனைவிக்கு பிரசவம் பார்த்து கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர்கள் அனைவருமே கூறுவது நாங்கள் மருத்துவமனை செல்ல விரும்பவில்லை என்பது தான்... இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாகத்தான் தமிழகமெங்கும் இது குறித்த விவாதம் எழுந்துள்ளது. ஹீலிங் சிகிச்சை முறை சரியா? தவறா? அதனைப் பின்பற்றலாமா? கூடாதா? ஒரு பார்வை! 

“ஹீலிங்” என்பது மருந்து இன்றி மாத்திரை இன்றி ஒரு மனிதனின் பிராண ஆற்றலை கொண்டு செய்யப்படும்  சிகிச்சை முறையாகும்.

மருந்து என்பது மறு-உந்து சக்தி ஆகும். அதை  தொடர்ந்து பயன்படுத்துவது தவறு. மனித உடலில் இயல்பாகவே உந்து சக்தி உள்ளது. நாம் தொடர்ச்சியாக சிறு சிறு விஷயங்களுக்கும் மருந்துகளை தேடி செல்லும்போது நம்முடைய உடல் அந்த குறிப்பிட்ட மருந்திற்காக செயல்பட ஆரம்பித்துவிடும் குறிப்பாக 'அல்லோபதி' மருத்துவம். இவ்வாறு நாம் தொடர்ச்சியாக மருந்துகளை உட்கொள்ளும் போது  நம்முடைய உடல் உந்து சக்தியை இழந்து விடும். இன்னும் எளிமையாக கூறவேண்டுமென்றால், ஒவ்வொரு நோயையும் எதிர்க்கும் தன்மை நம்முடைய உடலுக்கு இயற்கையாகவே உண்டு. ஆனால், தொடர்ச்சியாக உட்கொள்ளும் மருந்துகளின் மூலம் அந்த எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகின்றது.

அதே வேளையில், மருந்தினைப் பயன்படுத்த வேண்டிய நேரங்களில் பயன்படுத்திதான் ஆகவேண்டும். ஏனென்றால், பல ஆண்டுகளாக நம்முடைய உடல் அல்லோபதி மருத்துவத்திற்கு அடிமையாக உள்ளது. சிறு வயதிலிருந்தே அல்லோபதி மருத்துவத்தை எடுத்துக்கொண்ட உடல் திடீரென நாம் மேற்கொள்ளும் புதிய பயிற்சிகளையோ மருத்துவத்தையோ  ஏற்றுக்கொள்ளாது. நம்முடைய உடல் நாம் எடுத்துக்கொள்ளும் புதிய பயிற்சிக்கு இணங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். 

நம்முடைய முன்னோர்கள் யாரும் 'அல்லோபதி' மருந்துகளை பயன்படுத்தவில்லை, அவர்கள் யாருமே மருத்துவமனை செல்லவில்லை என்று கூறினால் அது தவறு!  சிறிது சிந்தித்து செயல்பட  வேண்டும். நம்முடைய முன்னோர்கள் வாழ்க்கை முறைக்கும், நம்முடைய வாழ்க்கை முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. பிரசவித்தும் ஒன்பது மாதம் வரை வயக்காடுகளில் சுற்றித்திருந்த நம்முடைய முன்னோர்களிடம், டிவி ரிமோட்டை எடுக்கக்
கூட மற்றவரின் உதவியை நாடும் நாம் போட்டிபோடக்கூடாது.

நாகரீகத்தின் வேகமான வளர்ச்சியால் நம்முடைய முன்னோரின் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யலாமே தவிர, நம்மால் முழுமையாக அவர்களுடைய வாழ்க்கையை வாழ முடியாது. அப்படி இருக்கும் போது, அவர்களுடைய சிகிச்சை முறையை மட்டும் கையாள்வது எந்தவிதத்தில் சரியாக இருக்கும்! ஆபத்தில் தான் முடியும்.

ஹீலிங் பயிற்சி தவறென கூறமுடியாது. அதே வேளையில் அனைத்து நோய்களுக்கும் ஹீலிங் சரியான தீர்வாகவும் அமையாது.

click me!