ஹாங்காங், சிங்கப்பூரில் பிரபல MDH, எவரெஸ்ட் மசாலா பொருட்களுக்கு தடை.. ஏன் தெரியுமா?

By Ramya s  |  First Published Apr 24, 2024, 5:22 PM IST

பிரபலமான இந்திய மசாலாப் பொருட்களின் பாதுகாப்பு குறித்து ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் கவலை எழுப்பியுள்ளன.


பிரபலமான இந்திய மசாலாப் பொருட்களின் பாதுகாப்பு குறித்து ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் கவலை எழுப்பியுள்ளன. ஹாங்காங்கில் உள்ள உணவுப் பாதுகாப்பு மையம் (CFS) வழக்கமான உணவுக் கண்காணிப்பை மேற்கொண்டது . அந்த ஆய்வில் பிரபலமான இந்திய தயாரிப்புகளான MDH மற்றும் எவரெஸ்ட் உள்ளிட்ட 4 மசாலாப் பொருட்களில் எத்திலின் ஆக்சைடு இருப்பதைக் கண்டறிந்தது. 

MDH இன் கறி தூள் (மெட்ராஸ் கறிக்கான மசாலா கலவை), கலவையான மசாலா தூள் மற்றும் சாம்பார் மசாலா மற்றும் எவரெஸ்டின் மீன் கறி மசாலா ஆகியவை இதில் அடங்கும். இதை தொடர்ந்து, இரு ஒழுங்குமுறை அதிகாரிகளும் விற்பனையை நிறுத்தவும், இந்த தயாரிப்புகளை அகற்றவும் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Latest Videos

undefined

சாக்லேட் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு ரத்த வாந்தி... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..

எத்தலின் ஆக்சைடு கொண்ட உணவு ஆபத்தானதாகவோ அல்லது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவோ இல்லை என்றால் மட்டுமே விற்கப்படலாம். இந்த விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் உணவு ஒழுங்குமுறை அமைப்பான சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA), எவரெஸ்ட் மீன் கறி மசாலா, Sp Muthiah & Sons Pte ஆகியவற்றின் தயாரிப்புகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த தயாரிப்புகளில், குறைந்த அளவு எத்திலீன் ஆக்சைடு கொண்ட உணவை உட்கொள்வதால் உடனடி ஆபத்து இல்லை என்றாலும், இந்த பொருளை நீண்டகாலமாக வெளிப்படுத்துவது புற்றுநோய்க்கான அதிக ஆபத்து உட்பட உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மசாலாப் பொருட்கள் சர்வதேச சந்தைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, US Food and Drug Administration (FDA) எவரெஸ்ட் உணவுப் பொருட்களை உணவில் பரவும் நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாவான சால்மோனெல்லா சோதனை செய்த பிறகு, குறிப்பிட்ட சில பொருட்களை திரும்பப் பெறுமாறு கோரியது.

இந்த சம்பவங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கேரளாவைச் சேர்ந்த கல்லீரல் நிபுணர் டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் குறித்து கவலை தெரிவித்தார். உணவுப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில், குறிப்பாக ஏற்றுமதிக்கான நோக்கத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பொறுப்புணர்வு அவசியம் என்றும் அவர் கூறினார்.

Diabetes : கோடையில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா..?

இந்திய மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு உள்ளதா என ஆய்வுகள் தொடர்வதால், நுகர்வோர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே இந்த தயாரிப்புகளை உட்கொண்டவர்கள் மற்றும் உடல்நலக் கவலைகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

click me!