Singapore : காதலி மீது சந்தேகம்.. அடித்தே கொன்ற இந்திய வம்சாவளி நபர் - சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

By Ansgar R  |  First Published Apr 23, 2024, 2:14 PM IST

Indian Origin Man In Singapore : சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர், தனது காதலியை கொன்ற வழக்கில் கடுமையான தண்டனையை பெற்றுள்ளார்.


எம். கிருஷ்ணன் என்ற நபர் சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஆவர். ஏற்கனவே திருமணமான அவர், தனது காதலி மற்ற ஆண்களுடன் உறவு வைத்திருப்பதாக கூறி அவர் கண்முடித்தனமாக தாக்கியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி இறந்த மல்லிகா பேகம் ரஹமான்சா அப்துல் ரஹ்மானை (வயது40) அடித்து உதைத்துள்ளார் கிருஷ்ணன். 

கடந்த நவம்பர் 2015ல், கிருஷ்ணனின் மனைவி, தன் கணவரும் அவரது காதலியும் தங்கள் வீட்டின் மாஸ்டர் பெட்ரூமில் மது அருந்துவதை கண்டுள்ளார். அதை கண்டு கோபமடைந்த அந்த பெண்மணி, கிருஷ்ணனை கண்டித்துள்ளார், உடனே கோவத்தில் கிருஷ்ணன் தன் மனைவியை தாக்கியுள்ளார். பின்னர் அது காவல்துறை வரை சென்று பெரும் பிரச்சனையானது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த நாட்டில் செம்மறி ஆடுகள் மீது 'Axe Body Spray' தெளிக்கிறாங்க.. காரணம் தெரிஞ்ச ஷாக் ஆவிங்க!!

பின்னர் அவரது மனைவி போலீசாரின் உதவியை நாடி, கிருஷ்ணனை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கிருஷ்ணன் தன் காதலியுடன் தன் உறவை தொடர்ந்துள்ளார். ஆனால் 2018ம் ஆண்டு கிருஷ்ணன் ஒரு பிரச்சனையால் சிறை சென்ற நிலையில் அந்த நேரத்தில் மல்லிகா பல ஆண்களுடன் உறவில் இருந்ததாக கிருஷ்ணனுக்கு தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தான் ஜனவரி 15, 2019 அன்று, கிருஷ்ணன் மல்லிகாவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மல்லிகாவை விலா எலும்பில் குத்தியுள்ளார் நிலை தடுமாறிய அவர் அருகில் இருந்த அலமாரியில் மோதியுள்ளார். அடுத்த நாள், மல்லிகா மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார். பல காயங்கள் மற்றும் சிராய்ப்புகளுடன் காணப்பட்டுள்ளார். 

மல்லிகா மருத்துவமனையில் இருந்தபோது, ​​கிருஷ்ணன் அந்த நாள் முழுவதும் மது குடித்துள்ளார். இரவில், மல்லிகாவின் சகோதரியுடன் தொலைபேசியில் மல்லிகாவுக்கு வேறு ஒருவருடன் உள்ள தொடர்பு குறித்து பேசியுள்ளார் கிருஷ்ணா. இந்த நிலையில் மல்லிகா மருத்துவமனையில் இருந்து மீண்டு வந்தவுடன் அவரை மீண்டும் மிருகத்தனமாக தாக்கியுள்ளார். 

ஒரு கட்டத்தில் வலி தாங்காமல் தரையில் விழுந்து கிடந்த மல்லிகாவை தூக்க முயற்சித்துள்ளார் கிருஷ்ணன். அப்போது தான் மல்லிகா பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார். உடனே கிருஷ்ணன் குடிமை பாதுகாப்பு படையினரை அழைத்த நிலையில், அவர்கள் மல்லிகா இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். உடனடியாக கிருஷ்ணன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் சுமார் 5 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் சிங்கப்பூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை கிருஷ்ணனுக்கு விதித்து தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணன் பல முறை மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் மோதிக் கொண்ட ஹெலிகாப்டர்கள்: மலேசியாவில் கோர விபத்து - 10 பேர் பலி!

click me!