Hoarse throat: தொண்டையில் கிச்கிச் தொந்தரவா? உடனடி நிவாரணம் தரும் சித்த வைத்தியம் இதோ!

By Asianet Tamil  |  First Published Feb 11, 2023, 7:53 PM IST

தொண்டையில் உண்டாகும் கிச்கிச் பிரச்சனைக்கு எப்படி நிவாரணம் பெறலாம் என இப்போது  பார்ப்போம். 
 


நம்மில் பலருக்கும் பருவகால மாற்றங்களினால் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை கரகரப்பு போன்ற சிறுசிறு உடல்நலக் கோளாறுகள் உண்டாகும். இத்தகைய பிரச்சனைகள் ஏற்படும் போது மாத்திரைகளை சுயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சிறுசிறு பிரச்சனைகளுக்கு கூட நாம் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அது பிற்காலத்தில் மிகப்பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி விடும். அதிலும் முக்கியமாக, மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், முதலில் பாதிக்கப்படுவது கல்லீரல் தான். ஆகவே, பருவகால மாற்றத்தினால் உண்டாகும் சிறுசிறு உடல்நலக் கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெற, வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களை கொண்டு சித்த வைத்திய முறைகள் சிலவற்றை முயற்சி செய்வது தான் நல்லது. இப்படி செய்வது மிகச் சிறந்த பலனைத் தரும். அவ்வகையில் தொண்டையில் உண்டாகும் கிச்கிச் பிரச்சனைக்கு எப்படி நிவாரணம் பெறலாம் என இப்போது  பார்ப்போம். 

தொண்டையில் கிச்கிச் பிரச்சனை

Latest Videos

undefined

தொண்டையில் ஏற்படும் கிச்கிச் பிரச்சனையை மிக எளிதாக போக்க முடியும். இதனைப் போக்க தேவைப்படும் மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்களை பெற நாம் எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், எல்லாமே நமக்கு மிகவும் பரிச்சயமான பொருட்கள் தான். அவற்றில் சிலவற்றைக் கொண்டு கிச்கிச் பிரச்சனையை சரிசெய்து விடலாம்.

2 ஆடாதோடை இலை மற்றும் 5 மிளகு எடுத்துக் கொண்டு, இதனுடன் பனை வெல்லம், நாட்டு சர்க்கரை அல்லது தேன் இவைகளில் ஏதேனும் ஒன்றை சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

சின்ன வெங்காயம் 5-ஐ எடுத்து, நாட்டு வெல்லத்துடன் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

பாலுடன் மஞ்சள் மற்றும் மிளகைச் சேர்த்து நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்.

முட்டையில் ஆஃப் பாயில் செய்து, இதனுடன் மிளகு, மஞ்சள் மற்றும் சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

சிற்றரத்தை, கொத்தமல்லி, சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் அதிமதுரம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பொடியாக செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியை சிறிதளவு எடுத்து, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

பூண்டு சாறுடன் தேனைக் கலந்து, இதனை தொண்டையில் தடவி வர வேண்டும்.

என்ன! இட்லி மாவில் பால் பணியாரம் செய்யலாமா! வாருங்கள் பார்ப்போம்!

வெந்நீரில் உப்பைச் சேர்த்து, வாய் கொப்பளிக்க வேண்டும்.

மேற்சொன்ன் வீட்டு வைத்திய முறைகளை சரியாகச் செய்தாலே போதும். தொண்டையில் ஏற்படும் கிச்கிச் பிரச்சனைக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கும். 

click me!