
பிரெஷ்ஷை நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடாது
நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய பிரெஷ்களை நீண்ட நாட்கள் வைத்திருப்பது பயன்படுத்துதல் கூடாது. குறிப்பிட்ட நாட்கள் அல்லது மாதங்களுக்கு பின்பு பிரெஷ் நிச்சயமாக மாற்றப்பட வேண்டிய பொருளாகும். அமெரிக்காவைச் சேர்ந்த பல் மருத்துவத்துறைச் சங்கம், ஒவ்வொரு நபரும் தங்களுடைய பிரெஷ்களை 3 முதல் 4 மாதங்களுக்குள் மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
பற்களுக்கு ஏற்றவாறு பிரெஷ்களை பயன்படுத்த வேண்டும்
பல் துலக்கும் பிரெஷ்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அவரவருடைய பற்களுக்கு ஏற்றவாறு பிரெஷ்களை தேர்வு செய்து, பயன்படுத்த தொடங்க வேண்டும். சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்று தரமற்ற பிரெஷ்களை வாங்கினால், வாய் சுகாதாரம் பாதிக்கப்படும். அதனால் பல்வேறு பாதிப்புகள் அடுத்தடுத்து ஏற்படும். பெரும்பாலான மருத்துவர்கள் மக்களுக்கு இலகுவான நார்களை கொண்ட பிரெஷ்களை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றனர். அப்போது பற்களின் ஈர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும்.
பற்களில் பிரெஷ்ஷை அழுத்தி தேய்க்கக் கூடாது
பல்துலக்குகையில் நன்றாக அழுத்தி தேய்ப்பதால் உங்களுடைய பற்கள் பிரகாசமாகிவிடும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அப்படி செய்வதால் உங்களுடைய பிரெஷ்ஷின் நார்கள் பாதிக்கப்படும். சீக்கரத்திலேயே ஒவ்வொரு நாரும் உடைந்து, பல்துலக்கும் போது வயிற்றுக்குள் சென்று வேறு சில உடல்நலப் பிரச்னைகளை உருவாக்கிவிடக்கூடும். எப்போது பற்களை நிதானமாக விளக்க வேண்டும். அதேபோல இந்த விஷயத்தில் பொறுமையை கையாள்வது மிகவும் முக்கியம். அப்போது தான் ஆரோக்கியமான சுகாதாரத்தை பேண முடியும்.
காரம் சாப்பிட்டால் மூலப் பிரச்னை வருமா..?? உண்மை பின்னணி இதுதான்..!!
அவசர அவசரமாக பற்களை தேய்க்கக்கூடாது
ஒருசிலருக்கு கழிவறைக்குள் சென்று பற்களை துலக்குவது என்றால் அருவருப்பாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள், எப்போதும் கழிவறைக்குள் சென்றாலும் அவசர அவசரமாக வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்துவிடுவார்கள். அப்படி செய்து மிகவும் தவறு. குறிப்பாக பற்கள் பராமரிப்பில் அது பிரச்னையை கொண்டுவந்து விடும். அவசர அடியாக பற்களை சுத்தம் செய்வதை தவிர்த்துவிட்டு, மெதுவாக அழுத்தம் கொடுத்து பல்துலக்குங்கள்.
தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்; தீமைகள்- ஒரு அலசல்..!!
ஒரே முறையில் தான் பற்களை விளக்க வேண்டும்
அடிக்கடி பற்களை மாற்றி மாறி விளக்குவது. தினசரி வெவ்வெறு முறைகளில் பற்களை விளக்குவது போன்றவையும் பிரச்னையை தரும். நீங்கள் மேலே இருந்து பற்களை விளக்கினால், மெதுவாக அழுத்தம் கொடுத்து கீழே கொண்டுவரப்பட வேண்டும். அதேபோல வலமிருந்து இடப்பகுதிக்கு வந்தாலும், அப்படித்தான் செய்ய வேண்டும். கை போகிற் போக்கில் மாற்றி மாற்றி விளக்கினால், நீங்கள் குறிப்பிட்ட பகுதிகளை சுத்தம் செய்யாமல் போய்விடும் நிலை ஏற்படலாம். அதனால் பக்கவாட்டு தேய்த்துவிட்டு, முன் பற்களை தேய்த்துவிட்டு, நாக்கை நன்றாக மடக்கி உட்புறங்களிலும் தேய்த்துவிட்டு பற்களை கழுவுங்கள். இதன்மூலம் பற்கள் எப்போதும் பளீச் சென்று இருக்கும்.