இந்த இரண்டு பொருட்கள் சேர்ந்தால் போதும்- உயர் கொலஸ்ட்ரால் நோயாளிகள் ஹேப்பி அண்ணாச்சி..!!

By Dinesh TGFirst Published Sep 29, 2022, 10:27 PM IST
Highlights

உடலில் அதிகளவிலான கொலஸ்ட்ரால் பிரச்னை இருந்தால், அது ரத்தக் குழாய்களில் சென்று படிந்துவிடும் அபாயம் உள்ளது. இது அதிகரிகத்தால் ரத்தக் குழாய்களின் உள்ளேயும் தடிமனான சுவர் போன்று கொலஸ்ட்ரால் படியத் துவங்கும். இதனால் இதயத்துக்கு ரத்தம் செல்வது தடைப்பட்டு, பல்வேறு இருதய நோய் பாதிப்புகள் உருவாக வழிவகுக்கும்.
 

இந்தியாவில் பலருக்கும் இருதய நோய் பாதிப்பு உள்ளது. பலரும் இருதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளுடன் உள்ளனர். அதனால் தற்போது ஆரோக்கியமாக இருக்கக்கூடியவர்கள் இருதய நலனை பேணுவது மிகவும் முக்கியம். இதற்கான செயல்பாடு தினசரி நாம் உண்ணும் உணவில் இருந்து துவங்குகிறது. நாள்தோறும் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி, சைக்கிளிங் போன்றவையும் அவசியம் செய்ய வேண்டும். 

உயர் கொலஸ்ட்ரால் பிரச்னை கொண்டவர்களுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். அவர்களுக்கு அசைவ உணவுகளை விடவும், சைவ உணவுகள் நல்ல முறையில் பயன்தரக்கூடியதாக இருக்கும். உயர் கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுக் கட்டுப்பாட்டில் இஞ்சியும் பூண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

வாங்கி 2 நாட்களான காளான்களை சமைத்து சாப்பிடுவது நன்மையா? தீமையா?

அவை இரண்டுக்கும் அழற்சியை எதிர்த்து போராடும் பண்பு உள்ளது. குறிப்பாக பூண்டு உடலில் இடம்பெற்றுள்ள எல்.டி.எல் கொலஸ்ட்ராலை குறைப்பதோடு ரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மேலும், கெட்டக் கொழுப்புகளை தமனிகளில் படிந்து அடைப்பை ஏற்படுத்தாமலும் பார்த்துக் கொள்கிறது.

இஞ்சிக்கு ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலை உறிஞ்சுக் கொள்ளும் தன்மையுள்ளது. இதனால் கொழுப்பு ரத்தக் கொழுவில் படியாது. மேலும் திரட்சியும் அடையாமல் பார்த்துக் கொள்கிறது. இஞ்சி மற்றும் பூண்டில் இருக்கும் இயற்கையான மூலக்கூறுகள் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுப்பதை சிறந்து விளங்குகின்றன.

வெறும் தமனிகளில் மட்டுமில்லாமல் அடிவயிற்றில் தேங்கியிருக்கும் கெட்டக் கொழுப்புகளையும் இஞ்சி மற்றும் பூண்டு சாப்பிடுவதால் கரைந்து விடுகின்றன. தினசரி உணவு வகைகளில் மட்டுமில்லாமல், அவ்வப்போது பூண்டையும் இஞ்சியையும் சேர்த்துக் கொண்டு பல்வேறு உணவுகளையும் சாறுகளையும் உருவாக்கி சாப்பிடுவது, கொலஸ்டிராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

click me!