அதிகரிக்கும் மாரடைப்பு.. மாரடைப்பிற்கும், கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கா.? மத்திய அரசு பகீர் தகவல்

By Raghupati R  |  First Published Apr 4, 2023, 7:11 PM IST

மாரடைப்பிற்கும், கோவிட் தொற்றுக்கும் உள்ள இணைப்பு கண்டறிய அரசு முயன்று கொண்டு வருகிறது என்று மத்திய சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.


கொரோனா தொற்றுக்குப் பின் மாரடைப்பு என்பது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பொதுவான மற்றும் சாதாரண விஷயமாக மாறிவிட்டது.

முன்பெல்லாம் முதுமையானவர்கள் நோய் என கருதப்பட்ட மாரடைப்பு, தற்போது அனைவருக்கும் பொதுவான நோய் என கருதப்படுகிறது. 42-50 அல்லது 40-க்கும் குறைவான மனிதர்களுக்கே தற்போது அதிக அளவில் மாரடைப்பு வருகிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. 

Tap to resize

Latest Videos

undefined

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 40 வயதிற்குட்பட்டவர்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளோர் விகிதம் ஒவ்வொரு ஆண்டும் 2% அதிகரித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் மாரடைப்பிற்கும், கோவிட்-19 நோய்த் தொற்றுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிய ஆராய்ச்சிக்கு அரசு நிதியளித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!

கொரோனா தொற்று (கோவிட்-19) இதய திசுக்களுக்கு தற்காலிக அல்லது நீடித்த பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் இதயத்தை பாதிக்கலாம். ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பல காரணிகளால் இது நிகழலாம். கொரோனா தொற்று பெரும்பாலும் இந்தியாவில் மாரடைப்பு அதிகரிப்புடன் தொடர்புடையது, ஆனால் இந்த இணைப்பை நிறுவுவதற்கான அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை.

ஆனால் SARS-CoV-2 தொற்று மற்றும் மாரடைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை நிறுவ எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இருப்பினும், கொரோனா தொற்று இதய திசுக்களுக்கு தற்காலிக அல்லது நீடித்த பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் இதயத்தை பாதிக்கலாம். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் படி, ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பல காரணிகளால் இது நிகழலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க..ஒரிஜினல் ட்விட்டர் லோகோ எவ்வளவு விலைக்கு வாங்குனாங்க தெரியுமா.? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதுகுறித்து பேசும் போது, “இதுதொடர்பான ஆய்வு நடத்த தேவையான அனைத்து தடுப்பூசி தரவுகளையும் CoWIN தளம் வழங்கியுள்ளது என்று அமைச்சர் கூறினார். கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) பக்கவாதம் மற்றும் கொரோனா தொற்று ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆய்வு செய்து வருகிறது என்று கூறினார்.

இந்தியாவில் இதுவரை SARS-CoV-2 இன் 214 வெவ்வேறு வகைகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், வைரஸ் தொடர்ந்து மாறுகிறது என்றும் மாண்டவியா கூறினார். மேலும் கொரோனா தொற்றை சமாளிக்க மத்திய அரசாங்கம் தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க..நிலக்கரி சுரங்க விவகாரம்: டெல்டா பகுதிகளை விட்டுடுங்க.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்

click me!