நம்முடைய வாழ்க்கையில் சிலருடன் இணைந்திருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த 3 வகை நபர்களை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய வாழ்க்கையில் பலர் வருவார்கள். சிலர் போவார்கள். வெகுசிலரே நம்முடன் எந்த சூழ்நிலையிலும் இருப்பார்கள். அதை மோசமான தருணங்களில் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஆனால் சில வகை மனிதர்களை நம் வாழ்வில் வைத்திருப்பதால் நம்முடைய முன்னேற்றம் தடைபடும். எப்போது அவர்கள் நமக்கு ஆபத்தானவர்களாக இருப்பார்கள். யாரை நம் வாழ்வில் இருந்து தூரமாக வைத்திருக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
அதிர்ஷ்டம்!!
தங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே அதிர்ஷ்டம் குறித்து பேச தொடங்கிவிடுவார்கள். தங்களுக்கு துரதிஷ்டம் இருப்பதாக சொல்வார்கள். எப்போதும் தலைவிதியை நினைத்து நொந்து கொள்வார்கள். இப்படிப்பட்ட மனிதர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளி இருங்கள். ஏனென்றால் வாழ்க்கையில் எந்த தவறு நடந்தாலும், அதற்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்வதை விட்டுவிட்டு, அதிர்ஷ்டத்தை மட்டுமே இவர்கள் குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். இந்த மாதிரியான நபர்கள் உங்களுடைய வாழ்க்கைக்கு மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களிடமிருந்து விலகி இருங்கள். ஏனென்றால் நீங்கள் ஏதேனும் வெற்றி பெற்றால் கூட உங்கள் உழைப்பை இருட்டடிப்பு செய்துவிட்டு, அதிர்ஷ்டம் தான் காரணம் என சொல்லும் ரகம் இவர்கள்.
இதையும் படிங்க: அட்சயதிரிதியை 2023 எப்போது வருகிறது? இந்த நாளில் தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கணும் தெரியுமா?
நம்பிக்கையில்லாதவர்கள்!!
நீங்கள் எதை சொன்னாலும் அதை நம்பாமல் ஆதாரம் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களிடமிருந்து நீங்கள் கொஞ்சம் தள்ளி இருக்க வேண்டும். உங்களை அவமானப்படுத்த அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். உங்களை 'நீயெல்லாம் ஒன்னுமே இல்லை' என்ற தொனியில் தான் நடத்துவார்கள். உங்களுடைய வாழ்க்கை லட்சியம், வருமானம், கடந்தகாலம் எதையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
உங்களை தாழ்த்தி பேசுபவர்கள்!!
எப்போதும் உங்களை தாழ்த்தி பேசுபவர்களிடம் விலகியே இருங்கள். இதனால் உங்களுடைய தன்னம்பிக்கை பாதிக்கப்படலாம். உங்களை குறை சொல்லி கொண்டே இருப்பார்கள். நேரடியாக அல்லது மறைமுகமாக உங்களை தாழ்த்தி பேசுவார்கள். காரணமே இல்லாமல் உங்களை குறைத்து பேசுவார்கள். இவர்கள் சொல்வதைக் கேட்டு உங்களைத் தாழ்வாகக் கருதக் கூடாது.
இந்த 3 வகையான மனிதர்களிடம் இருந்து விலகி இருங்கள். நலம் வாழுங்கள்.
இதையும் படிங்க: ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு எவ்வளவோ காரணம் இருக்கலாம்! ஆனா இந்த 4 விஷயங்களை செய்தால், விந்துவோட தரம் கூடும்!