ஆபாச படங்கள் பார்ப்பதால், உங்கள் செக்ஸ் லைப் பாதிப்பாகும் ? ஷாக்கிங்கா இருக்குல்ல!

By Asianet Tamil  |  First Published Mar 29, 2023, 10:27 PM IST

பார்ன் விடீயோஸ் பார்ப்பதால், செக்ஸ் வாழ்வில் பல்வேறு விதமான பிரச்சனைகள் உண்டாகின்றன .அவை என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்


இன்றைய நவீன உலகத்தில் ஆபாச படங்களை பார்க்காத மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என்று ஒருவரையும் கூற இயலாது. பருவம் அடைந்த அனைத்து வாலிபர்களும் செல்போன் மூலமாக அனைவரிடமும் போகிறது. வலைத்தளம், செல்போன் என்று அனைவரிடமும் இருப்பதால் மிகச் சுலபமாக இம்மாதிரியான படங்களை எங்கிருந்தும் பார்க்கும் சூழ்நிலையில் தான் அனைவரும் உள்ளார்கள்.

குறிப்பாக டீன் ஏஜில் இருப்பவர்கள் இது மாதிரியான படங்களை பார்ப்பதால் பல விதமான பிரச்சனைகளை பின்னாளில் சந்திக்கிறார்கள். இப்படி பார்ன் மூவிஸ் பார்ப்பதால் அவர்களின் திருமணத்திற்கு பிறகு செக்ஸ் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகள் சந்திக்கிறார்கள். பெற்றோர்களிடம் அல்லது ஆசிரியர்களிடம் எதையும் அவர்கள் சரியாக கற்றுக் கொள்ளாத காரணத்தினாலும், தவிர தவறான விஷயங்களை மிக எளிதாகவும் நேரடியாகவும் கற்றுக் கொள்கிறார்கள். பார்ன் விடீயோஸ் பார்ப்பதால், செக்ஸ் வாழ்வில் பல்வேறு விதமான பிரச்சனைகள் உண்டாகின்றன .அவை என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மன உளைச்சல்:

இம்மாதிரியான விடீயோக்களை பார்ப்பதால் நிறைய மாணவர்கள் அதிக மன உளைச்சளோடும் , குற்ற உணர்வோடும் வாழ்கிறார்கள். நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட இந்த அதீத மன உளைச்சலால் அவர்களது படிப்பில் பின் தங்கி காணப்படுகிறார்கள். படங்களை பார்த்து அவர்களும் அதே போன்று சுயஇன்பம் செய்வது, பின் அதனை பற்றிய ஒரு குற்ற உணர்வு இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து மனசோர்வை தருகிறது.

விறைப்பு தன்மை குறையும்:

ஆபாசப்படங்களை பார்ப்பதால், சுய இன்பம் செய்து கொள்ளும் இளைஞர்களுக்கு விறைப்புத் தன்மையில் பிரச்சினை உண்டாகும் சூழ்நிலை அதிகமாக உள்ளது என்று ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றது. இத்தாலியில் நடந்த ஆய்வில் அதிக அளவிலான ஆபாசப்படம் பார்ப்பதால் செக்ஸ் அனோரெக்ஸியா ஏற்படும் என்று கூறியுலாளர்கள்.
இம்மாதிரியான பிரச்சனை உண்டாவதால் திருமணத்திற்கு பின் உடலுறவின் போது தேவையில்லாத பதட்டத்தை உண்டாக்கும். அதோடு உடலுறவவு மேற்கொள்ளும் போது முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியாது என்றும் கூறுயுள்ளார்கள் .

பாலியல் செயல்திறன் குறைவு:

ஆபாச படங்களை அதிகமாக பார்க்கும் இளைஞர்களுக்கு குறைந்த அளவிலான பாலியல் செயல் திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். ஆபாசப்படமும் ,சுயஇன்பமும் தான் இதன் காரணங்கள் என்று தெறிவித்துள்ளார்கள்

பாலியல் அடிமையாக மாற்றும்:

தொடர்ந்து ஆபாசப்படம் பார்ப்பதால் தவறான வழியில் அதாவது பாலியல் வன்முறையில் ஈடுபடுவராக பலரை மாற்றியுள்ளது

அடல்ட் லைப்பிலும் மாற்றம் :

பெரும்பாலான இளைஞர்கள் தினமும் குறைந்த பட்சமாக 1/2 மணி நேரமாவது ஆபாச படங்களை செல் போன் மூலமாக பார்க்கிறார்கள். இவ்வாறு தினமும் பார்ப்பதால் அவர்களின் திருமண உறவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இவர்கள் நீண்ட நேர உடலுறவுக்காக மாத்திரை எடுத்துக் கொள்வது, தம்பதிகளிடம் இருக்கும் செக்ஸ் உறவு குறைந்து காணப்படுகிறது.

ஆபாசப்படத்தில் இருக்கும் நன்மை:

அதிக அளவில் பார்க்காமல் கட்டுப்பாட்டோடு பார்த்தால் ஆபாசப்படமும் கட்டில் சுகத்தை உற்சாகத்தோடும் நீண்ட நேரமும் செய்ய வழிவகுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது . தவிர இது உடலுறவில் புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்க்க முடிகிறது.
ஆபாசப்படங்களை பார்ப்பதால் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனை பாதிக்கு பாதியாக குறைக்கிறது என்றும்
கூறியுள்ளார்கள்.

இதை செய்தாலே போதும்! விந்து முந்துதலிருந்து, ஆண்மை குறைபாடு வரை பல்வேறு பிரச்சனைகள் சரியாகும்.

Latest Videos

click me!