உயிரைக் குடிக்கும் டெங்குவில் இருந்து விரைவில் விடுபட... இந்த உணவுகளை நல்லா சாப்பிடுங்க!

First Published Aug 8, 2018, 1:34 PM IST
Highlights

கொசுக்களால் பரவி மனிதனின் உயிரையே கொடுக்கும் மிக கொடிய நோய் "டெங்கு". உடலை மிகவும் வருத்தி படாத பாடு படுத்தும். 

இரண்டு இலை, இரண்டு வேளை, இரண்டு ஸ்பூன்...

பப்பாளி மரத்தின் இலைகள் டெங்கு காய்ச்சலை விரட்டுவதில் பெரும் பங்காற்றுகிறது. அதற்கு வெறும் இரண்டு பப்பாளி இலைகள் போதும். ஆம். இரண்டு பப்பாளி இலைகளை நசுக்கிப் சாறு பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை, இரவு என இரண்டு வேளைகளிலும் இந்தச் சாற்றை இரண்டு ஸ்பூன் சாப்பிட்டால் டெங்கு காய்ச்சல் இருந்த இடம் தெரியாமல் ஓடும்.

ஆரஞ்சு

ஆரஞ்சுப் பழத்தில் விட்டமின் சி உள்பட ஏராளமான சத்துகள் உள்ளன. இவை செரிமானத்திற்கு மட்டுமல்ல சிறுநீர் மட்டுப்படுவதை கட்டுப்படுத்தும். இதனால் தான் டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடவும் ஆரஞ்சு உதவுகிறது.

கஞ்சி

டெங்கு காய்ச்சலால் உயிருக்கே போராடிக் கொண்டிருப்பவர்கள் கூட கஞ்சி குடித்தால் புத்துயிர் பெறுவார்கள். அவ்வளவு சத்துகள் கொண்டது கஞ்சி. தயாரிப்பதும் எளிது. பலன் பெரிது.

இளநீர்

உடல் சூட்டைத் தணிப்பதில் இளநீருக்கு தனிப்பங்கு உண்டு. அப்படிப்பட்ட இளநீர் டெங்குவை விரைவில் குணமாக்கும் என்று தெரியுமா? ஆம். இதில் இருக்கும் கனிமச் சத்துகள் டெங்குவை மிக விரைவில் குணமாக்கும்.

காய்கறி மற்றும் பழங்கள்

கேரட், வெள்ளரி போன்ற காய்களையும், ஸ்ட்ராபெர்ரி, கொய்யாப்பழம், எலுமிச்சைப்பழம், கிவி போன்ற பழங்களையும் சாறு எடுத்துக் குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். டெங்குவும் விரைவில் குணமாகும்.

click me!