சர்க்கரை நோயாளிகள் பலா, மாம்பழத்தைக் கண்டிப்பாக தவிர்க்கணுமா? டாக்டர் என்ன சொல்றாங்கனு பாருங்க!!

By Ma riya  |  First Published Jun 23, 2023, 12:06 PM IST

சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் பலா, மாம்பழம் சாப்பிடலாமா? என்பது குறித்து திருவனந்தபுரம் நிம்ஸ் மெடிசிட்டியின் உடல் எடை குறைப்பு நிபுணரும், இயற்கை மருத்துவ துறை தலைவருமான லலிதா அப்புக்குட்டன் விளக்குகிறார். 


நீரிழிவு நோய் இன்று மிகவும் பொதுவான நோயாகிவிட்டது. இந்த நோய் குறித்து பலருக்கும் வரும் சந்தேகம் உணவு குறித்தவை தான். என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எந்த உணவை தவிர்க்க வேண்டும் என பல கேள்விகள் மக்கள் மனதில் உள்ளன. முதலில், நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான உணவுக்கு மாற வேண்டும். ஆனால் பழங்கள் பலருக்கும் விருப்பமானதாக இருக்கும்.

அதிலும் பலாப்பழம் மற்றும் மாம்பழம் நீரிழிவு நோயாளிகள் விரும்பும் இரண்டு பழங்கள். இவர்கள் இந்த பழங்களை சாப்பிடலாமா? இது குறித்து திருவனந்தபுரம் நிம்ஸ் மெடிசிட்டியின் உடல் எடை குறைப்பு நிபுணரும், இயற்கை மருத்துவ துறை தலைவருமான லலிதா அப்புக்குட்டனிடம் கேட்டோம். 

Tap to resize

Latest Videos

நோயாளிகள் பலா, மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது என அவர் கூறினார். ஏனெனில் இவை இரண்டும் பழுத்தவுடன் உயர் கிளைசெமிக் குறியீட்டு உணவுகளாக மாறும். இவற்றை உண்பதால் கலோரி அளவு அதிகரிக்கலாம். பழுக்கும் முன்பும் மாம்பழம் கலோரிகளை கூட்டும். 100 கிராம் பலாப்பழத்தில் 150 கலோரிகள் உள்ளன, ஆனால் பழுத்தவுடன் அது 160 கலோரிகளாக மாறும். இருப்பினும், புரதம் மற்றும் நார்ச்சத்து ஒரே அளவு தான். அதாவது, சர்க்கரை நோய் உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு விரைவில் அதிகரிக்கும் என லலிதா அப்புக்குட்டன் கூறுகிறார். 

"இன்று பலருக்கு நீரிழிவு நோயால் வரும் புண்கள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில், பலா, மாம்பழம் சீசன் காலங்களில் நீரிழிவு நோயாளி அதிகமாக இவற்றை உண்கின்றனர். இதனால் சர்க்கரையின் அளவு அதிகமாக மாறுவதால், ​கிருமிகள் விரைவாகப் பெருகி, அல்சரையும் உண்டாக்கிவிடும். மாம்பழத்தைப் பொறுத்தவரை, 100 கிராம் பழுத்த மாம்பழத்தில் 100 கலோரிகள் உள்ளன. ஆனால், பச்சை மாம்பழத்தில் 66 கலோரிகள் மட்டுமே உள்ளது. ஆனால் இதில் மற்ற முக்கியமான சத்துக்களும் அடங்கியுள்ளன"என்கிறார் டாக்டர். லலிதா அப்புக்குட்டன். 

"பலாப்பழம் அல்லது மாம்பழம் சாப்பிட வேண்டும் என விரும்பினால் அதை காலை உணவாக 100 கிராம் மட்டுமே சாப்பிடலாம். இதை உண்ணும்போது மற்ற பழங்கள் அல்லது மாவுச்சத்துள்ள உணவுகளை சேர்க்காமல் கவனமாக இருங்கள். சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு விரைவாக உயரும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், பலா, மாம்பழம் மட்டுமின்றி, எந்தப் பழத்தை சாப்பிட்டாலும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். பலாப்பழம், மாம்பழம் அல்லது பிற பழங்களை சாப்பிட்ட பிறகு எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் அதிக நேரம் படுத்திருப்பது அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்"என டாக்டர். லலிதா அப்புக்குட்டன் எச்சரிக்கை விடுக்கிறார். 

இதையும் படிங்க: உப்பு மட்டுமல்ல... அதிக சர்க்கரையும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்... எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!!

click me!