Food
பலாப்பழத்தில் காணப்படும் மெக்னீசியம் எலும்பு நோய்களை வரவிடாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.
குழந்தைகளுக்கு பலாப்பழத்தை கொடுப்பதால் அவர்களுடைய எலும்புகள் சிறுவயதிலே வலுவடைய உதவியாக இருக்கும்.
இரும்புச்சத்து, நையாசின், துத்தநாகம், தயமின், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் மிக்கது பலாப்பழம்.
கோடையில் பலாப்பழத்தை உண்பதால் உடல் வறட்சி, களைப்பு நீங்கும். இதயம் வலுவாகும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
பலாப்பழம், தயிர், தண்ணீர், நாட்டுச்சர்க்கரை ஆகியவை ஒன்றாக அரைத்து கொள்ளுங்கள். இதனுடன் வறுத்த கருப்பு எள் தூவி கொள்ளலாம். இதை உண்பதால் எலும்புகள் வலுவாகும்.
தேன், நெய் ஆகியவற்றுடன் பலாப்பழத்தை உண்பதால் இதயம் மூளை செயல் திறன் மேம்படும்.
பலாச்சுளையில் வைட்டமின் சி, தாது உப்புகள், நார்ச்சத்து உள்ளதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.
மலச்சிக்கல் இருப்பவர்கள் பலாச்சுளை சாப்பிடுவதால் நிவாரணம் கிடைக்கும். அளவுக்கு அதிகம் சாப்பிட்டால் வயிற்று கோளாறு ஏற்படும்.
உடலில் ஹார்மோன் சுரப்பை தூண்டுவதால் தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.