Food
நமது உடல் ஆரோக்கியத்திற்கு வெல்லம் மிகவும் நல்லது. இதில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
ஒரு டம்ளர் தண்ணீரில் வெல்லம் கலந்து குடித்தால் அது செரிமான அமைப்பை சீராக வைக்கும். வாயு, அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சனைகள் சரியாகும்.
சாப்பிட்ட பின்னர் ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டால் உடலில் ஆற்றல் அதிகமாகும். நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படும்.
சாப்பாட்டுக்கு பிறகு வெல்லம் உண்பதால் எலும்புகள் வலுவாகும். ஏனென்றால் இதில் கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் காணப்படுகின்றன.
வெல்லத்தை தினமும் ஒரு துண்டு சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியும். செரிமானம் எளிமையானால் எடையை கணிசமாக குறைக்க முடியும்.
வெல்லம் உண்பதால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். உணவுக்கு பின்னர் சாப்பிடலாம்
வெல்லம் உண்பதால் ரத்த சோகை வராமல் தடுக்க முடியும். ஏற்கனவே ரத்தசோகை இருப்பவர்களுக்கும் வெல்லம் நல்லது.
வெல்லத்தில் உள்ள இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை நம் உடலில் இரத்தத்தை அதிகரிக்க செய்யும். ரத்த குறைவாக காணப்படுபவர்கள் நிச்சயம் வெல்லம் உண்ணுங்கள்.
உடலை ஆரோக்கியமாக பேண, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க, செரிமானம் மேம்பட தினமும் வெல்லம் உண்பதை பழக்கமாக்குங்கள். உடல் பொலிவடையும்.