Food
உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் வெங்காயத்தில் உள்ளன.
வெங்காயத்தை முறையாக பராமரித்து சேமிக்காவிட்டால் சீக்கிரம் கெட்டுபோய்விடும்.
கோடையில் வெங்காயம் சீக்கிரம் முளைத்துவிடும். அதிக வெப்பம், அதிக ஈரப்பதம் காரணமாக வெங்காயம் முளைக்கிறது.
வெப்பம், ஈரப்பதமான காலநிலை பாக்டீரியாக்கள் வளர ஏற்ற சூழலை உருவாக்கி கொடுக்கிறது. இதனால் வெங்காயம் சீக்கிரம் முளைக்கும்.
அறுவடை செய்த பின்னர் நீண்ட காலம் சேமிக்கப்பட்ட வெங்காயம் சீக்கிரம் முளைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
வெங்காயத்தை குளிர்ந்த, உலர்ந்த, நல்ல காற்றோட்டமான திறந்த இடத்தில் சேமிக்கலாம்.
வெங்காயத்தை சணல் சாக்குகளை தரையில் விரித்து அதன் மீது பரப்பி வைத்துக்கொள்ளலாம். இதனால் விரைவில் கெடாது.
சில வீடுகளில் உருளைக்கிழங்கு, பூண்டு, பச்சைக் காய்கறிகள், தக்காளி, எலுமிச்சையை ஆகியவற்றுடன் வெங்காயத்தை வைப்பார்கள். இது தவறு.
வெங்காயத்தை தனியாக காற்றோட்டமான இடங்களில் சேமித்து வைப்பது நல்லது. பிரிட்ஜில் வைக்கவே கூடாது.
வெங்காயம் பிளாஸ்டிக் பையில் வைக்கும்போது விரைவில் கெடும். ஏனெனில் பிளாஸ்டிக் பையில் உருவாகும் வெப்பம் வெங்காயத்தை கெட்டு போகச் செய்யும்.