
சிறுநீரகப் புற்றுநோய் (kidney cancer) அண்மையில் பரவாலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை தொடக்கத்தில் கண்டறிந்தால் தக்க சிகிச்சை மூலம் மீள முடியும். இந்தப் பதிவில் அலட்சியம் செய்யக் கூடாத கிட்னி கேன்சரின் சில அறிகுறிகள் குறித்து காணலாம்.
பின்பக்க முதுகு வலி
சிறுநீரக தொடர்பான நோய்கள் வந்தாலே அதில் முக்கியமான அறிகுறியாக பின்பக்க முதுகு வலி இருக்கும். முதுகில் இரண்டு பக்கமும் வலி இருந்தால் மருத்துவரை கண்டிப்பாக அணுக வேண்டும்.
இரத்தசோகை
சிறுநீரக புற்றுநோய் ஏற்படுபவர்களுக்கு இரத்தசோகை பிரச்சனை வரக்கூடும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இல்லாமல் இருக்கும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது இரத்தசோகை வராமல் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலமும் உறுதியாக இருக்கும்.
வீக்கம்
பொதுவாக சிறுநீரகக் கோளாறுகள், சிறுநீரகப் புற்றுநோய் ஆகியவை இருந்தால் கால்கள், பாதங்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரகத்தில் யூரிக் அமில அளவு அதிகமானால் முதல் அறிகுறியாக கால்களில் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கத்தை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகுங்கள்.
கட்டிகள்
அடிவயிறு அல்லது இடுப்பின் இரண்டு பகுதிகள் அல்லது சிறுநீரகம் உள்ள இடத்தில் தொடர்புடைய முதுகின் இருபுறங்களிலும் கட்டிகள் மாதிரி தெரியலாம். இதை அலட்சியம் செய்யக் கூடாது. இவை புற்றுநோய் கட்டிகள் அறிகுறியாக இருக்கக்கூடும்.
சிறுநீரில் இரத்தம்
எப்போதும் சிறுநீர் வெளியேற்றத்தைக் கவனிக்க வேண்டும். அதில் ரத்தம் வெளியேறினால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். சில துளிகள் ரத்தம் வெளியேறினாலும் அது பிரச்சினைதான். சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது சிறுநீரகப் பிரச்சனையின் முக்கிய அறிகுறியாகும். ரத்தத்தில் சில துளிகள் ரத்தம் வந்தாலும் அது கிட்னி கேன்சர் அறிகுறியாகவும் இருக்கலாம்.
பலவீனம்
சிறுநீரகக் கோளாறுகள் வந்தாலே உடல் பலவீனமாகவும் சோர்வாகவும் இருக்கும். மோசமான உடல் சோர்வு சாதாரணமாக தோன்றினாலும் அடிக்கடி இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். இதுவும் கிட்னி கேன்சராக இருக்கக் கூடும். சில நேரங்களில் வேறு நோய்கள் அல்லது சத்துக்குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். அதையும் கவனித்து சரிசெய்ய வேண்டும்.
பசியின்மை
பசியின்மை சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் இதுவும் கிட்னி பிரச்சனையின் ஆரம்பப் புள்ளி தான். வயிறு, குடல், உள்ளுறுப்புகள் சம்பந்தம்மான பிரச்சனைகள் இருந்தாலும் பசிக்காது. சிறுநீரகப் புற்றுநோயும் அதில் அடங்கும். தொடர்ந்து பசியின்மை இருந்தால் நீங்களே டானிக் வாங்கி குடிக்காமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். பொதுவாக உங்களுக்கு இரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லையென்றால் அதனால் உடலில் ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம். இதில் சிறுநீரகப் பிரச்சனைகளும் விதிவிலக்கல்ல. திடீரென ரத்த அழுத்தம் அதிகரிப்பது சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.