
முகத்தின் அழகை மேம்படுத்த கடைகளில் விற்பனையாகும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் வீட்டிலேயே மிக எளிதாக கிடைக்கக்கூடிய இயற்கையான பொருள் எதுவென்றால் "கஸ்தூரி மஞ்சள்" தான். முக அழகை மேம்படுத்துவதில் இதற்கு ஈடாக ஏதுமில்லை என்றே சொல்லலாம்.
கஸ்தூரி மஞ்சளில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களால் உண்டாகும் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் பூஞ்சை பல சரும பிரச்சனைகள் வருவதை தடுக்க உதவுகிறது. மேலும் கண்களை சுற்றி இருக்கும் கருவளையம், சன் டேன் போன்ற சரும பிரச்சனைக்கும் இதை பயன்படுத்தலாம். சரி இப்போது இந்த பதிவில் முகத்திற்கு கஸ்தூரி மஞ்சள் நன்மைகள் மற்றும் அதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
1. முக முடி உதிர..
சில வளரும் இளம் பெண்களின் முகம், கை, கால்களில் முடி அதிகமாக இருக்கும். இத்தகையவர்கள் கஸ்தூரி மஞ்சள் உடன் காய்ச்சாத பால் கலந்து பேஸ்ட் போலாக்கி அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு குளிந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நாளடைவில் முடி உதிர்வதோடு சருமமும் மென்மையாகும்.
2. வெயிலால் சருமம் செய்தமடையாமல் இருக்க..
சருமத்தில் இருக்கும் சன் டேனை போக்க கஸ்தூரி மஞ்சள் சிறப்பாக செயல்படும். எனவே அடிக்கடி வெளியில் செல்பவர்கள் குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கொண்டு முகத்தை கழுவி பிறகு வெளியே சென்றால் சூரிய ஒளியால் சருமத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படாது.
3. முகம் பளிச்சிட..
இதற்கு காய்ச்சாத பசும் பாலுடன் அரை ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து அந்த பேஸ்ட்டை உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பளிச்சீடும்.
4. இறந்த செல்களை வெளியேற்ற..
இதற்கு அரை ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை நன்கு கலந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின் அப்படியே வைத்துவிட்டு நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள இறந்து செல்கள் விரைவில் நீங்கி முகம் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும்.
5. கரும்புள்ளிகள் நீங்க..
இதற்கு 2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சளுடன், 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 வைட்டமின் ஈ மாத்திரையை பிழிந்து அந்தக் கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை அவ்வப்போது செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருத்திட்டுகள் முற்றிலுமாக நீங்கிவிடும் மற்றும் முகம் பிரகாசமாக இருக்கும்.
6. முகம் மின்ன..
1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சளுடன், 2 ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்து நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் தங்கம் போல மின்னும்.
7. முகம் பளபளக்க..
இதற்கு கஸ்தூரி மஞ்சளுடன் பயித்த மாவு, தயிர் சேர்த்து நன்கு கலந்து அந்த பேச்சை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். முகம் எப்போதுமே பளபளப்பாக இருக்கும்.
இத மறக்காதீங்க..
- சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கஸ்தூரி மஞ்சளுடன் பால், தயிர் கலந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் கஸ்தூரி மஞ்சளுடன் பன்னீர் கலந்து பயன்படுத்தலாம்.
- முகத்தின் அழகைப் பேண கஸ்தூரி மஞ்சளுடன், கடலை மாவு, பச்சை பயிறு மாவு மற்றும் பாலாடை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து அந்த பேஸ்டை முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதை வாரத்திற்கு 4 முறை போடலாம்.
- வாரத்திற்கு ஒருமுறை கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி வந்தால் சருமத்தில் அலர்ஜி பிரச்சனைகள் ஏதும் வராது.