Tulsi Face Pack : துளசி பேஸ்பேக் தெரியுமா? முகப்பரு, கரும்புள்ளிகளை அறவே நீக்கும்

Published : Aug 19, 2025, 04:30 PM IST
face packs

சுருக்கம்

முகத்திற்கு துளசி நன்மைகள் மற்றும் அதை பயன்படுத்தும் முறை குறித்து இந்த பதிவில் காணலாம்.

முகம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் தற்போதைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், மெல்லிய கொடிகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட துளசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆம் , துளசி சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குகிறது. சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைக்க இது பெரிதும் உதவுகிறது. துளசியானது பல நூற்றாண்டுகளாகவே ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் பல சரும பிரச்சனைகளில் நீக்குவது மட்டுமல்லாமல் சருமத்தை அழகாகவும் மற்ற உதவுகிறது.

சருமத்திற்கு துளசி நன்மைகள் :

1. எரிச்சலை தணிக்கும்

துளசியில் நிறைந்திருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் சிவப்பை தணிக்க உதவுகிறது. இது தவிர அரிக்கும் தோல், அலர்ஜி, தடிப்பு தோல் போன்றவற்றிற்கும் துளசி பயன்படுத்தலாம். உணர்திறன் சருமம் உள்ளவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.

2. முகப்பருவை குணமாக்கும்

துளசியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை எதிர்த்து போராடும். மேலும் இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் முகப்பருவங்கள் ஏற்படும் சிவப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது. கூடுதலாக துளசி சருமத்தை சுத்தப்படுத்தி, துளைகளை அடைத்து, பருக்கள் வருவதற்கு வழிவகுக்கும் எண்ணெய் மற்றும் அழுக்கை அகற்றும். துளசியை சருமத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வெடிப்புகள் வருவதை தடுக்கலாம்.

3. முதுமையை எதிர்த்து போராடும்

துளசியில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் வயதாவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்து போராடும். மேலும் வயதான தோற்றத்தை மெதுவாக்கி இளமையான தோற்றத்தை அளிக்கும்.

4. முகத்தை பளபளப்பாக்கும்

துளசியில் இருக்கும் வைட்டமின் சி முகத்தை பளபளப்பாகவும், சருமத்தை தெளிவாகவும் வைக்க உதவுகிறது. மேலும் சூரிய ஒளி, ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை குறைக்கவும் உதவுகிறது. இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தின் நிறம் மற்றும் பிக்மென்டேஷன் குறையும்.

துளசி பயன்படுத்து எப்படி?

1. துளசி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக் :

இதற்கு 1 ஸ்பூன் துளசி பொடியுடன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் கரும்புள்ளிகளை குறைக்கும் மற்றும் சருமத்தை பிரகாசமாகும்.

2. துளசி மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக் :

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க 1 ஸ்பூன் துளசி பொடியுடன், 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு முகத்தை கழுவ வேண்டும். கற்றாழை ஜெல் சருமத்தின் எரிச்சலை ஆற்றும். துளசி வீக்கம் மற்றும் சிவத்தலை குறைக்க உதவும்.

3. துளசி மற்றும் தயிர் ஃபேஸ் பேக் :

இதற்கு 1 ஸ்பூன் துளசி பொடியுடன், 1 ஸ்பூன் தயிர் கலந்து அதை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தயிர் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை அகற்றும் மற்றும் சருமத்தை உரிக்கும். அதே சமயம் துளசி சருமத்தை சுத்தப்படுத்தும் மற்றும் முகப்பரு வதை தடுக்கும்.

4. துளசி டோனர்

துளசி டோனர் அனைத்து வகையான சருமத்திற்கும் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு கப் கொதிக்கும் நீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை சேர்க்கவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதை அரவைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி டோனர் பயன்படுத்தலாம். இது சருமத்தின் துணைகளை சுத்தப்படுத்தும், வீக்கத்தை குறைக்கும் மற்றும் சருமத்தை பிரகாசமாக வைக்க உதவுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க