காபி அல்லது டீ குடித்த பிறகு சோர்வு ஏற்படுகிறதா..? அலட்சியம் வேண்டாம்..!!

By Asianet Tamil  |  First Published Mar 10, 2023, 9:59 AM IST

காலை மட்டுமல்ல, வேறு எந்த நேரத்தில் சோர்வு தோன்றினாலும் பெரும்பாலான மக்கள் அப்போது காபி அல்லது டீ குடிப்பார்கள். இந்த பானங்கள் அப்போதைக்கு புத்துணர்ச்சியாக தோன்றினாலும், பிற்காலத்தில் பல்வேறு உடல்நலக் கோளாறுக்கு வழிவகுக்கும்.
 


காலையில் எழுந்தவுடனேயே காபி அல்லது டீ அருந்துவதை பெரும்பாலானோர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது மிகவும் நல்ல பழக்கம் இல்லை என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது நல்லது என்றும், காலை உணவுக்குப் பிறகு டீ அல்லது காபி அருந்துவது நல்லது என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. அதே நேரத்தில், பெரும்பாலான மக்கள் காலையில் மட்டுமல்ல, நாள் முழுவதும் போதிய இடைவெளியில் டீ அல்லது காபி குடிக்கின்றனர். ஆனால் தேநீர் அல்லது காபி மூலம் தற்காலிக புத்துணர்வு தான் ஏற்படுகிறது. இது பிற்காலத்தில் மேலும் சோர்வுக்கு வழிவகுக்கும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

குறிப்பாக கோடையில் சோர்வாக இருக்கும் போது டீ அல்லது காபி குடிக்காமல் தவிர்ப்பது நல்லது. இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு, பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கக் கூடும். நீங்கள் தொடர்ந்து சோர்வாக உணர்ந்தால், மருத்துவரின் உதவியுடன் அதற்கான காரணத்தைக் கண்டறிவது முக்கியம். முக்கியமாக போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றாலும் உடலில் சோர்வு தோன்றலாம். அதனால் டீ அல்லது காபி இல்லாமல் திடீரென்று ஏற்படும் சோர்வை தவிர்க்க உதவும் குறிப்பிட்ட பானங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.

Tap to resize

Latest Videos

ஸ்மூத்தி

பழத்தையும் பாலையும் ஒன்றாகக் கலந்து ஸ்மூத்தி செய்வது நல்லது. பழத்தை இனிக்காத தயிரில் அடித்து லஸ்ஸி செய்வதும் நல்லது. சில பாதாம் மற்றும் உலர் பழங்களை இதனுடன் சேர்க்கலாம். இதன்மூலம் காலை வேளையில் உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்து உடனடியாக கிடைக்கும். 

மூலிகை தேநீர்

வீட்டிலேயே தயாரிக்கப்படும் மூலிகை டீகளும் இத்தகைய சோர்வைப் போக்க உதவும். கிரீன் டீ, ஏலக்காய் கொண்ட கிரீன் டீ, தேனுடன் கிரீன் டீ, பால் இல்லாத ‘பிளாக் டீ’ மற்றும் இஞ்சி டீ என வீட்டில் தயாரிக்கக்கூடிய மூலிகை தேநீர் பல உள்ளன. 

மாதுளைச் சாறு

மாதுளை சாறு உட்கொள்வதும் உயிர்ச்சக்தியை அதிகரிக்க உதவும். மாதுளை பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஒரு பழமாகும். மாதுளை வைட்டமின்-சி, வைட்டமின்-கே, வைட்டமின்-இ, மாங்கனீசு, இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.

இந்த 5 செடிகளும் ஒரு கொசுவை கூட உங்கள் வீட்டிற்குள் நுழைய விடாது..!!

சியா விதைகள்

கோடையில் சியா விதைகள் கொண்டு சாறு தயாரித்து அடிக்கடி சாப்பிடலாம். இதன்மூலம் வைட்டமின்-சி மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்டவை உடலுக்கு கிடைக்கும். அதேபோல நீர் நிறைந்த தர்பூசினி, முலாம் பழம் போன்றவற்றையும் அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கு நீரேற்றத்தை தரும்.

இளநீர்

இயற்கையான பானங்கள் வரிசையில் கிடைக்கும் இளநீருக்கு சோர்வு மற்றும் உடல் முடக்கத்தை போக்குவதற்கான அற்புத சக்தி உள்ளது. இது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தினமும் ஒரு இளநீர் அருந்துவதன் மூலம், கோடையில் நீரிழப்பு ஏற்படாமல் உடலை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். 
 

click me!