குழந்தையின்மை பிரச்னைக்கு உணவு உள்ளிட்ட வாழ்க்கை முறை சார்ந்த மாற்றங்கள் தேவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும், இந்த பிரச்னை எதிர்கொள்வதற்கு பிற காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. எப்படி இருந்தாலும், உணவு முறை மாற்றங்கள் குழந்தையின்மை பிரச்னைக்கு வழங்கும் தீர்வு குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
கருவுறாமை என்பது ஆண் பெண் இருபாலரும் சந்திக்கும் பிரச்சனை. இதற்கு உடல் ரீதியாகவும் உணவு ரீதியாகவும் மற்றும் வாழ்க்கை முறை ரீதியாகவும் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, வாழ்க்கை முறை என்று பார்க்கும் போது உணவு பயன்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் முக்கிய காரணமாக உள்ளது. உணவு உள்ளிட்ட வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலம், மலட்டுத்தன்மையை எதிர்த்துப் போராட என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதுவே உடல் ரீதியான காரணங்களாக இருந்தால், அதற்கு மருத்துவ சிகிச்சைகள் மட்டுமே தீர்வாக அமையும். எனினும் குழந்தையின்மை பிரச்னையை எதிர்கொள்வதற்குரிய உணவுமுறை குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
காம்ப்ளக்ஸ் கார்ப் ஆகாது
கார்போஹைட்ரேட்டுகள் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் 'காம்ப்ளக்ஸ் கார்ப்' என்று ஒரு வகை உண்டு. அதுதொடர்பான தகவல் பெரியளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரொட்டி, வெள்ளை அரிசி, குக்கீகள் மற்றும் கேக் ஆகியவற்றில் காணப்படும் சுத்திகரிக்கப்பட்ட கார்ப் தான் காம்ப்ளக்ஸ் கார்ப். அதாவது பிரச்னைக்குரிய கார்போஹைட்ரேட்டு கொண்ட உணவுகள். இவற்றுக்கு பதிலாக கொஞ்சம் அரிசிச் சோறுடன் பருப்பு வகைகள், முழு தானியங்கள், பல காய்கறிகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை உங்களுடைய உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள்.
ஆண்டிஆக்சிடண்டுகள் முக்கியம்
எப்போது நீங்கள் சாப்பிடும் உணவுகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இது கருவுறாமை பிரச்னைக்கு எதிர்த்து போராடு தன்மை கொண்டதாகும். ப்ரோக்கோலி, கீரை, கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், வெண்ணெய், பீட், முள்ளங்கி, கீரை, இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் ஸ்குவாஷ் ஆகிய உணவுகளில் இயற்கையாகவே ஆண்டிஆக்சிடண்டுகள் உள்ளன. அதனால் வாரம் மூன்று நாட்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடுவது நல்ல தீர்வை தரும்.
அன்சாச்சுரேட்டட் கொழுப்புக் கூடாது
சில உணவுகளில் 'டிரான்ஸ் ஃபேட்' அல்லது 'அன்சாச்சுரேட்டட் ஃபேட்' இருக்கும். முடிந்தவரை இவற்றை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அதாவது உறைந்த பீஸ்ஸா, பிஸ்கட், இனிப்பு வகைகள், பல பொடிகளை தடவி வறுத்த கோழி, ரசாயனங்கள் கலந்து வேக வைக்கப்பட்ட இறைச்சி போன்றவற்றில் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம். அதுவும் குறிப்பிட்ட உணவுகளை அடிக்கடி வெளியே வாங்கி சாப்பிட்டால், பல்வேறு வகையில் உடல்நலம் பாதிக்கப்படும். இதுபோன்ற உணவுகள் உயிருக்கு கூட ஆபத்தாக முடியும்.
திருமணம் 5 வகைப்படுகிறது- தெரியுமா உங்களுக்கு..?? தெரிந்துகொள்ளுங்கள்..!!
புரதம் நிச்சயம்
உங்கள் உணவில் அதிக புரதத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். கோழி, கடல் உணவு, சால்மன், பதிவு செய்யப்பட்ட டுனா மற்றும் மத்தி உள்ளிட்ட மீன்களில் புரதத்துக்கான ஆதாரங்கள் அதிகமாக உள்ளன. சைவம் என்றால், சோயா பீன் பொருட்கள், பருப்பு வகைகள், பால் பொருட்கள் மற்றும் வலுவூட்டப்பட்ட சைவ உணவுகள் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். எனினும் புரத உணவுகளை அளவுடன் சாப்பிடுவது நல்லது. மருத்துவரின் பரிந்துரைப் படி புரத உணவுகளை நீங்கள் சாப்பிட்டு வரலாம்.
நல்ல கொழுப்பு அவசியம்
கொழுப்பு நிறைந்த பால் சாப்பிட முயற்சி செய்யுங்கள். பால் அல்லது தயிர் போன்றவற்றையும் உட்கொள்ளலாம். முன்பே குறிப்பிட்டது போல, 'சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை' முடிந்தவரை தவிர்க்க வேண்டும். வெள்ளை பாஸ்தா, ரொட்டி மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசி போன்றவற்றில் இதுபோன்ற கார்ப் உள்ளன.
உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் மருத்துவரை அணுகுவது நல்லது. குறிப்பாக பிற உடல்நலப் பிரச்சினைகள் அல்லது நோய்கள் உள்ளவர்கள் நிச்சயமாக மருத்துவரை ஆலோசித்த பின்னரே, உணவில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.