நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே காந்தல் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 249 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 6-ம் தேதி ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
உதகையில் அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்ட பள்ளி மாணவி கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே காந்தல் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 249 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 6-ம் தேதி ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. அப்போது, 4 மாணவிகள் போட்டோ போட்டிக்கொண்டு அதிக சத்து மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர்.
undefined
இதையும் படிங்க;- பெண் தோழியுடன் உல்லாசமாக இருக்க ஒரே நேரத்தில் 2 வயாகரா போட்டு ரெடியாக இருந்த 41 வயது நபருக்கு நேர்ந்த சோகம்
இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் பள்ளி மாணவிகளை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கல்லீரல் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க;- ஆறிபோன டீயை கொடுக்கிறாயா? திட்டிய மாமியாரை கதறவிட்டு தீர்த்து கட்டிய மருமகள்.. எப்படி தெரியுமா?
உடனே சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து, அந்த பள்ளி மாணவியை சென்னைக்கு கொண்டு செல்லும் போது பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட அப்பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.