இந்த மாதிரி ஸ்ரீலங்கா ரசம் செய்தால் சும்மாவே குடித்து காலி ஆக்கிடுவாங்க!

By Asianet Tamil  |  First Published Mar 8, 2023, 12:57 PM IST

வாருங்கள்! ஸ்ரீலங்கா ரசம் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்


தினமும் சாப்பிடும் உணவில் நாம் ரசத்தினை சேர்த்துக் கொள்வது ரசம். ரசமானது நாம் உண்ணும் உணவை எளிதில் செரிமானம் செய்வதற்கு பெரிதும் துணை புரிகிறது. ரசத்தில் புதினா ரசம், லெமன் ரசம், தக்காளி ரசம், நண்டு ரசம் என்று பல விதமான ரசம் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள்.

அந்த வகையில் இன்று நாம் ஸ்ரீலங்கா ஸ்டைலில் ரசம் செய்ய உள்ளோம். இதன் சிறப்பென்னவென்றால் இதில் தக்காளி மற்றும் ரசப்பொடி சேர்க்காமல் செய்வதாழும், மேலும் இதில் வெங்காயம் சேர்த்து செய்யப்படுவதால் இதன் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். இந்த ரசம் சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்றதாகும்.

ஸ்ரீலங்கா பரோட்டா, ஸ்ரீலங்கா சிக்கன் மசாலா எப்படி சுவை மிகுந்ததோ அதே அளவிற்கு இந்த ரசமும் சுவை கொண்டதாக இருக்கும்.
வாருங்கள்! ஸ்ரீலங்கா ரசம் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

புளிக்கரைசல் -1/2 கப்
பெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - 1
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 1/2 ஸ்பூன்
தனியா -1 ஸ்பூன்
சோம்பு - 1/4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1-2
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை - கையளவு

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற கோதுமை சேமியா பிரியாணி!

Tap to resize

Latest Videos

செய்முறை:

முதலில் புளியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி பின் அதிலிருந்து புளிக்கரைசல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மல்லித்தழையை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மிக்சி ஜாரில் மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, வெங்காயம், காய்ந்த மிளகாய் மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பேஸ்ட்  அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எடுத்து வைத்துள்ள புளிக்கரைசல் ஊற்றி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து நன்றாக கலந்து கொதிக்க வைக்க வேண்டும் .

கொதிக்கும் போது அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி வந்த பின் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து பின் அடுப்பில் இருந்து கடாயை இறக்கி விட்டு,பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி பரிமாறினால் சுவையான ஸ்ரீலங்கா ஸ்டைல் ரசம் ரெடி!

click me!