இப்படி 1 முறை கொங்கு சிக்கன் மசாலா செய்து அசத்துங்க! அப்பறம் எப்போதும் இதையே செய்து தர சொல்லுவாங்க!

By Asianet Tamil  |  First Published Mar 7, 2023, 2:09 PM IST

வாருங்கள்! ருசியான கொங்கு நாடு சிக்கன் மசாலாவை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


சிக்கனை பல விதங்களில் சமைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் ஒரு முறையாவது கொங்கு நாடு ஸ்டைலில் மசாலா செய்து பாருங்கள். பின் இதனையே எப்போதும் செய்து தரும்படி வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள்.

வாருங்கள்! ருசியான கொங்கு நாடு சிக்கன் மசாலாவை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

கிராம்பு - 2
பட்டை - 1 இன்ச்
சோம்பு - 1/2 ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

ஊற வைப்பதற்கு.:

சிக்கன் - 200 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
லெமன் ஜூஸ்-1 பழம்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

அரைப்பதற்கு:

துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
கசகசா - 1ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
மல்லித் தூள் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
 

இனி இட்லி, தோசைக்கு பீர்க்கங்காய் சட்னி செய்து பாருங்க!

Tap to resize

Latest Videos

செய்முறை:

முதலில் சிக்கனை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் லெமன் ஜூஸ், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து நன்றாக பிரட்டி விட்டு சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் ,தக்காளி மற்றும் பூண்டு ஆகியவற்றை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் காய்ந்த பின்னர் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் முதலியவற்றை சேர்த்து வறுத்துக் கொண்டு, பின் அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வறுத்து பின் அதில் கசகசா மற்றும் மல்லித்தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும்.பின் கலவையை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்துக் கொண்டு, அதனை மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஆகியவை போட்டு தாளித்து பின் பொடியாக அரிந்து வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கி விட்டு பின் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வெங்காயம் கண்ணாடி போல் மாறும் வரை வதக்கி விட வேண்டும்.அடுத்தாக பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து,வதக்கி விட்டு உப்பு தூவி நன்கு மசியும் வரை வதக்கி விட வேண்டும்.

இப்போது குக்கரில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி விட வேண்டும். இப்போது மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து சேர்த்து நன்கு கிளறி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட்டு 4 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கினால், அட்டகாசமான கொங்குநாடு சிக்கன் மசாலா ரெடி!

click me!