முளைகட்டிய தானியங்களில் கொட்டி கிடக்கும் சத்துக்கள்.. காலையில் எப்படி சாப்பிடணும்.. எப்படி சாப்பிடக்கூடாது..!

By Ma Riya  |  First Published Mar 5, 2023, 7:35 AM IST

முளைகட்டிய தானியங்களை எப்போது சாப்பிட்டால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.. எப்போது உண்ணக் கூடாது முழுவிவரம்.. 


முளைகட்டிய தானியங்களில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. காலை, மதியம், மாலை, இரவு ஆகிய வேளைகளில் எப்போது வேண்டுமானாலும் முளைகட்டிய தானியங்களை உண்ணலாம். இதனை எப்போது வேண்டுமானாலும் உண்ணலாம் என்றாலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இதை மதியம் உண்பது ரொம்ப நல்லது. ஏதேனும் ஒரு வேளைதான் உண்ண வேண்டும். 

எப்படி சாப்பிடலாம்? 

Latest Videos

undefined

முளைகட்டிய தானியங்களை உண்ணும்போது 50-50 ரூல் பின்பற்ற வேண்டும். பாதி சாப்பாடு, பாதி முளைகட்டிய தானியம் என்ற அளவில் உண்ண வேண்டும். உணவு மட்டும் இல்லாமல் வெறுமனே தானியம் உண்ண வேண்டும் என நினைத்தால் வேக வைத்து உண்ணுங்கள். முளைகட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் உண்ணக் கூடாது. 

யார் சாப்பிடவே கூடாது?

அசிடிட்டி, அல்சர், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனை இருந்தாலும் கருத்தரித்த பெண்களும் வயதானவர்களும் முளைகட்டிய தானியங்களை வேகவைத்து சாப்பிட்டால் நல்லது. அவர்கள் முளைகட்டிய தானியங்களை அப்படியே எடுத்து கொள்ளக் கூடாது. 

மதியம், இரவு உணவுகளுடன் சமைக்காத முளைகட்டிய தானியங்களை சேர்த்து உண்ணலாம். காலை வேளை வெறும் வயிற்றில் முளைகட்டிய தானியங்கள் உண்டால், வயிற்று பிரச்சனைகள் வரும். ஏனெனில் நாம் இரவில் தண்ணீரில் ஊறவைத்து தானியங்களை முளைகட்டச் செய்கிறோம். இதனால் அதில் அமிலத்தன்மை அதிகமாகி வைட்டமின் ‘சி’ சத்து பெருகிவிடும். ஏற்கனவே காலையில் நம் வயிற்றில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும். அந்த நேரம் முளைகட்டிய தானியத்தை உண்பதால் அசிடிட்டி, அல்சர் ஆகிய பிரச்சனைகள் வரலாம். ஆகவே இட்லி, தோசை, சப்பாத்தி, சாப்பாடு உள்ளிட்ட ஏதேனும் ஒரு காம்பினேஷனில் முளைகட்டிய தானியங்களை சாப்பிடலாம். 

இதையும் படிங்க: Explained: உடற்பயிற்சி செய்யும்போதே நிகழும் மரணங்கள்.. மருத்துவர்கள் சொல்லும் பின்னணி என்ன?

சில தானியங்களும் பயன்களும்..! 

  1. முளைக்கட்டிய கொள்ளு உண்பதால் உடலில் இருக்கும் வெப்பம் தணியும். இது நம்முடைய தொப்பையை நன்கு கரைத்து உடல் பருமனை கட்டுக்குள் வைக்கும். 
  2. முளைக்கட்டிய கம்பு நம்முடைய உடலுக்கு வலு கொடுக்கும். ஊட்டச்சத்துக் குறைபாடிருந்தால் தினமும் கம்பு சாப்பிடலாம். 
  3. முளைக்கட்டிய பச்சைப்பயறு உண்பதால் தோல் பளபளப்பாகும். நினைவாற்றல் அதிகமாகி மறதி நோயை குறைக்கிறது. இந்த தானியம் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தாக இருக்கும். 
  4. முளைக்கட்டிய வெந்தயம் பெண்களுக்கும் சர்க்கரை வியாதி கொண்டோருக்கும் நல்லது. சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் வெந்தயத்தை முளைகட்ட வைத்து உண்ணலாம். நாள்தோறும் ஒரு கப் உண்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். பெண்களுடைய கர்ப்பப்பை தொடர்பான நோய்கள், வெள்ளைப்படுதலை சுகப்படுத்தும். 
  5. முளைகட்டிய உளுந்தை சாப்பிட்டால் புரதம், பொட்டாசியம், கால்சியம், நியாசின், இரும்பு, தியாமின், ரிபோஃப்ளேவின், அமினோ அமிலங்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். இது ஏதேனும் நோயின் பாதிப்பில் இருந்து விடுபட்ட நபர்களுக்கு உடல் பலத்தை கூட்டும். 

இதையும் படிங்க: தொப்பை கிடுகிடுனு குறைய.. தினமும் காலையில் இந்த அற்புத டீ குடித்து பாருங்கள்..!

click me!