கெட்ட கொழுப்பை வேகமாக கரைக்கும் 5 சூப்பர் உணவுகள் என்னென்ன தெரிஞ்சுகோங்க..

By Ma Riya  |  First Published Mar 3, 2023, 6:07 PM IST

Cholesterol: கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தவறாமல் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் பட்டியல் இதோ..


நீங்கள் அதிகமான உடல் எடையோடு அவதிப்படுகிறீகளா? உடற்பயிற்சி செய்யவும் நேரமில்லாமல் தவிக்கிறீர்களா? சோம்பலாகவே இருக்கா? அப்போ இந்த பதிவு உங்களுக்குதான். இதில் உள்ள 5 உணவுகளை தினமும் உணவில் எடுத்து கொண்டால் உங்களுடைய உடலில் இருக்கும் நச்சுகளும், கெட்ட கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.  

இலவங்கப்பட்டை

Tap to resize

Latest Videos

இலவங்கப்பட்டையில் இருவகைகள் உள்ளன. வீட்டில் பயன்படுத்துகிற தடித்த பட்டை, இன்னொன்று சுருள் எனும் சிலோன் பட்டை. இந்த சுருள் பட்டை நம் உடல் எடை குறைப்பை தூண்டும் என ஆய்வு சொல்கிறது. இது நம் உடம்பில் உள்ள வளர்சிதை மாற்ற பிரச்சனையை சரிசெய்து தேவையில்லாத கொழுப்பை குறைக்க உதவும். இலவங்கப்பட்டை நேரடியாக சாப்பிட வேண்டாம், டீயில் போட்டு காலை வெறும் வயிற்றில் பருகுங்கள். கொலஸ்ட்ரால் நல்ல குறையும். 

மஞ்சள் 

மஞ்சள் பல நோய்களை குணமாக்க உதவி செய்யும். நம் உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்பை குறைக்க மஞ்சள் உதவுகிறது. நாள்தோறும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். காலையில் வெறும் வயிற்றில் டீ பருகும்போது அதில் மஞ்சள் கலந்து அருந்தினால் உடலில் உள்ள நச்சுககள் வெளியேறும். நோயெதிர்ப்பு மண்டலம் கூட வலுவாகும். 

இதையும் படிங்க: தொப்பை கிடுகிடுனு குறைய.. தினமும் காலையில் இந்த அற்புத டீ குடித்து பாருங்கள்..!

தக்காளி 

தக்காளியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், புரதங்கள் கூட மிகுந்து காணப்படுகின்றன. நார்ச்சத்தும் கொஞ்சம் உள்ளது. இதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடண்டுகள் கெட்ட கொழுப்பை நன்கு குறைக்கும்.  

கொத்தமல்லி இலை 

கொத்தமல்லி இலை கெட்ட கொழுப்புகளைக் கரைக்க உதவும். இதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள். ஆனால் நல்ல முறையில் கெட்ட கொழுப்பை கரைக்க கொத்தமல்லி செம்ம தேர்வு. இதில் காணப்படும் நார்ச்சத்துக்கள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத குணம் கொண்டது. நாள்தோறும் உணவில் கொத்தமல்லி இலை எடுத்து கொள்ளலாம். கொத்தமல்லி இலையை ஜூஸாக அரைத்து அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து வெறும் வயிற்றில் அருந்தலாம். இந்த உணவை தவிர சியா விதை, அவகேடோ ஆகியவையும் கெட்ட கொழுப்பை கரைக்க ரொம்ப உதவியாக இருக்கும். 

இதையும் படிங்க: வாரம் இருமுறை இந்த கீரை சாப்பிட்டால்.. வாழ்க்கை முழுக்க கல்லீரல், சிறுநீரகம் பிரச்சனையே கிட்ட வராது..!

click me!