முட்டைக்கோஸ் வைத்து சூப்பரான சட்னி செய்யலாமா?

By Asianet Tamil  |  First Published Mar 2, 2023, 3:48 PM IST

இப்படி ஆரோக்கிய நலனை தரும் முட்டைக்கோஸ் வைத்து சத்தான,சுவையான சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்


நாம் தினமும் காலை உணவாக எடுத்துக் கொள்ளும் இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார், சட்னி என்று சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக, புதுமையாக ஏதேனும் ஒரு சட்னி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு துணை புரியும்.

பொதுவாக தேங்காய் சட்னி, மல்லி சட்னி, கார சட்னி, பூண்டு சட்னி என்று செய்த சட்னி வகைகளைசெய்வதால் வீட்டில் உள்ளவர்கள் வேறு ஏதாவது செய்து தர சொன்னால் இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க. முட்டைகோஸ் போன்ற காயினை பொரியல்,கூட்டு சாம்பார் ஆகியவற்றில் சேர்த்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் முட்டைக்கோஸ் வைத்து சூப்பரான சட்னியை செய்யலாம். இது வழக்கமாக நாம் சட்னி வகையில் இருந்து மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

முட்டைக்கோஸில் அதிக அளவு நார்சத்து உள்ளதால் செரிமான மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. மேலும் பெண்களுக்கு மெனோபாஸ் நேரங்களில் ஏற்படும் பாஸ்பரஸ், கால்சியம், இழப்பை முட்டைகோஸ் சரி செய்கிறது. இப்படி ஆரோக்கிய நலனை தரும் முட்டைக்கோஸ் வைத்து சத்தான,சுவையான சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

முட்டைக் கோஸ் - 200 கிராம்
தேங்காய் - 1/4 கப்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய்-2
தக்காளி - 1
இஞ்சி - 1/2 இன்ச்
கறிவேப்பிலை - 1 கொத்து
கெட்டி புளிக் கரைசல் - சிறிது
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

தாளிக்க :

கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
 

உடல் அசதியை போக்கும் ஆட்டு நல்லி எலும்பு சூப்!

Tap to resize

Latest Videos

செய்முறை:
 

முதலில் முட்டைகோஸ், வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். புளியில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கெட்டியான கரைசல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின் அதில் சிறிது கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயத் தூள்ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதனை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம் இஞ்சி,பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து நன்கு வதங்கிய பின்னர்,அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள முட்டைக்கோஸ் சேர்த்து, அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். முட்டைக்கோஸின் வாசனை சென்ற பிறகு பின் தக்காளியை சேர்த்து வதக்கி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

பின் அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி பின் அதில் ஜாரில் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பின் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் சிறிது கடுகு, உளுத்தம் பருப்பு,காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றினால், முட்டைகோஸ் சட்னி ரெடி!

click me!