வாருங்கள்!வீட் ஃபலூடா ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த கோடை காலத்தில் உடலினை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பழங்கள், பழச்சாறுகள், இளநீர்,நீர்மோர் என்று பல விதமான குளிர் பானங்களையும் எடுத்துக் கொள்வார்கள். மேலும் குளிர்ச்சியான உணவுகளையும் சேர்த்துக் கொள்வார்கள்.
அப்படி உடலினை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் ஃபலூடா ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். இந்த ஃபலூடாவை கோதுமை மாவில் செய்வதால் இது ஆரோக்கியமான அதே நேரத்தில் சுவையயன ரெசிபியும் கூட. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை மீண்டும் எப்போது செய்து தருவீர்கள் என்று கேட்கும் அளவிற்கு இதன் சுவை மிக ஆபரமாக இருக்கும்.மேலும் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் இதனை செய்து அவர்களை குளிர்விக்கலாம்.
வாருங்கள்! வீட் ஃபலூடா ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1/2 கப்
வெனிலா ஐஸ்கிரீம் - 1ஸ்பூன்
மாம்பழக் பல்ப்-1 ஸ்பூன்
ஃப்ரூட் ஜாம் - 2 ஸ்பூன்
பட்டர்-1 ஸ்பூன்
வேஃபர் பிஸ்கட் – 2
பொடித்த முந்திரி - 1 ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 3 ஸ்பூன்
பச்சை ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
இன்று டின்னருக்கு அட்டகாசமான நீலகிரி சிக்கன் செய்து அசத்துங்க!
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து, 2 கப்தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் ஆரம்பித்த பின்னர்,தீயினை சிம்மில் வைத்து விட்டு,பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை முறுக்கு அச்சில் வைத்து கொதிக்கும் தண்ணீரில் பிழிந்து விட வேண்டும்.
undefined
இதில் சிறிது பட்டர் சேர்த்து அடுப்பினை நிறுத்தி விட வேண்டும். இப்போது வந்துள்ள கோதுமை நூடுல்ஸை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி,அதன் மேல் ஐஸ் கட்டிகளை போட்டு, 1/2 மணி நேரம்வரை அப்படியே வைத்து விட வேண்டும். இப்போது ஒரு கண்ணாடி க்ளாசில் வேக வைத்து வடிகட்டிய கோதுமை நூடுல்ஸ் சிறிது சேர்த்து அதன் மேல் பொடித்து வைத்துள்ள சர்க்கரை சேர்க்க வேண்டும்.
பின் அதன் மேல் ஃப்ரூட் ஜாம் சிறிது போட்டு அதன் மேல் மாம்பழ பல்ப்சிறிது ஊற்றி பின் மீண்டும் சிறிது சர்க்கரை சேர்த்து விட வேண்டும். பின் அதில் வெண்ணிலா ஐஸ்க்ரீம் போட்டு சிட்டிகை ஃபுட் கலர் சேர்த்து அதன் மேல் பொடித்து வைத்துள்ள முந்திரி சேர்த்து இறுதியாக வேஃபர் பிஸ்கட் வைத்து பரிமாறினால் சுவையான வீட் ஃபலூடா ரெடி!