9-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு.. தேர்வறைக்குள் நுழையும் போது நடந்த சோகம்...

By Ramya s  |  First Published Nov 4, 2023, 11:33 AM IST

குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில் 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த மாரடைப்பு தற்போது இளம் வயதினைரையும் அதிகமாக பாதித்து வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்பதே வேதனையான விஷயம். பள்ளிகளில் விளையாடும் போது அல்லது படிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் இதே போன்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில் 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த மாணவி சாக்‌ஷ் ரஜோசரா என்றும், அவர் ராஜ்கோட் மாவட்டத்தின் ஜாஸ்டன் தாலுகாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. சாந்தபா கஜேரா பள்ளியில் படித்து வந்த அவர் நேற்று காலை தேர்வறைக்குள் நுழையும் போது மயங்கி விழுந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறப்பின் காரணம் குறித்து கண்டறிய மாணவியின் உடல், உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது.

 

என்ன சொல்றீங்க! கோவிட்க்குப் பிறகு மாரடைப்பு ஆபத்து அதிகரித்துள்ளதா? காரணம் இதோ..!!

கடந்த சில மாதங்களாக குஜராத்தில், குறிப்பாக ராஜ்கோட்டில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வருவது பெற்றோர் மத்தியில் பீதியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனாவுக்கு மாரடைப்புக்கு உள்ள தொடர்பு குறித்து கூறியிருந்தார். மேலும் கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்பதாகவும், அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கக்கூடாது என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!