சிசேரியன் பிரசவமா? வெள்ளைப்பூண்டு வதக்கி சாப்பிடுங்க; உடம்பு ஜம்முன்னு ஆகும்.. வீட்டு டிப்ஸ்!!

Published : Jul 20, 2024, 12:00 PM IST
சிசேரியன் பிரசவமா? வெள்ளைப்பூண்டு வதக்கி சாப்பிடுங்க; உடம்பு ஜம்முன்னு ஆகும்.. வீட்டு டிப்ஸ்!!

சுருக்கம்

பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறவி. சுகப்பிரசவம் ஒருநாள் வலியோடு முடிந்து விடும். ஆனால் சிசேரியன் பிரசவம் வலி மிகுந்தது.  சிசேரியன் பிரசவம் முடிந்த பின்னர் பல தாய்மார்கள் உடலை பராமரிக்க தவறிவிடுவார்கள். இதனாலேயே பலர் வயதானவர்கள் போல மாறி விடுவார்கள். சிசேரியனுக்குப் பின்னர் ஆரோக்கியத்தை பராமரிக்க நம்முடைய பாட்டிகள், அம்மாக்கள் கடைபிடிக்கும் வீட்டு டிப்ஸ் உங்களுக்காக.

சிசேரியன் பிரசத்திற்கு பிறகு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஆபரேசன் செய்த வலியும், தையல் பிரிந்து விடக்கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்வும் அதிகமாகவே இருக்கும். எனவேதான் சிசேரியன் முடிந்து ஒருவாரம் மருத்துவமனையில் ரெஸ்ட் எடுத்து விட்டு வந்த பின்னர் உடல் பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

தாய்ப்பால் அவசியம்
பிரசவம் முடிந்து மயக்கத்திற்குப் பின்னர் கண் விழித்த பின்னர் லெமன் ஜூஸ் குடிப்பது நல்லது. இது உடம்பில் எஞ்சியுள்ள அனஸ்தீசியா வெளியேற வழி செய்யும். தாய்ப்பால் குழந்தைக்கு சிறந்த உணவு என்று, அதே போல் தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு முக்கியமான ஒன்று. இதனாலே பிரசவம் முடிந்த உடன் குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சிசேரியன் முறையில் குழந்தையை பிரசவித்திருந்தால் தாய் வலுவிழந்தும் மிகுந்த வலியுடனும் இருப்பார்கள். இதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது கடினமாக இருந்தாலும் சீம்பால் எனப்படும் முதல் பாலை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் கொடுக்கப்படும் முதல் பால் வாழ்நாள் முழுக்க குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. தாய் மயக்கத்தில் இருந்தாலும், கூட எப்படியாவது குழந்தையை பால் குடிக்க வைக்க வேண்டியது அவசியம்.

உணவுக்கு பிறகு பெருஞ்சீரகம் சாப்பிட சொல்றாங்களே.. அது ஏன் தெரியுமா? தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!
சத்தான உணவுகள்:
சிசேரியன் செய்தவர்களுக்கு குழந்தை பிறந்து 2 வாரம் வரை வலி இருக்கத்தான் செய்யும். அந்த வலியைப் போக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையை மட்டும் சாப்பிடுங்கள். உங்களது வலி, காயம் ஆறவேண்டுமெனில் சரியான உணவு அவசியம். குறிப்பாக, சத்தான உணவு வேண்டும். புரோக்கோலி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற விட்டமின் சி உள்ள உணவுகள், ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்ட நட்ஸ் ஆகியவை சாப்பிடுவது நல்லது.

வெள்ளைப்பூண்டு நல்லது
பிரசவம் முடிந்து வந்த உடனேயே நாட்டு மருந்து போட்டு பூண்டு குழம்பு காரமில்லாமல் செய்து கொடுப்பார்கள். நல்லெண்ணெய் அதிகம் சேர்த்து சுக்குக்களி செய்து சாப்பிட கொடுப்பார்கள். எதையும் வேண்டாம் என்று கூறாமல் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.
புரதம், இரும்புச்சத்து, விட்டமின் சி உள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் திசுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். காயம் விரைவில் மறையும். ரத்தப்போக்கை ஈடு செய்ய இரும்புச்சத்து உணவுகள் உதவும். பூண்டு குழம்பு, கீரை, காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். நீங்கள் தும்மல், இருமல் வரும் போது, சத்தம் போட்டு சிரிக்கும்போது ஒரு கையால் உங்கள் வயிற்றை பிடித்துக் கொள்ளுங்கள்.

முடி உதிர்வை தடுக்க.. ஒரு வாரத்தில் தலைமுடிக்கு எத்தனை முறை எண்ணெய் தேய்க்க வேண்டும் தெரியுமா?

ரொம்ப சிம்பிள்:
இன்றைய காலகட்டத்தில் சிசேரியன் எளிதாகி வருகிறது. எனவே பிரசவத்திற்கு முன்பே அச்சப்பட்டு மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம். சுகப்பிரசவம் நடக்கவே நடக்காது என்று முடிவு செய்த பின்னர்தான் சிசேரியன் செய்ய டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். பிரசவத்திற்குப் பின்னர்  வலிகளை வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை மூலமாக பிரசவித்திருக்கும் தாய்மார்கள் மேற்கொள்ளவேண்டிய உடல் நல பராமரிப்புகளை வீட்டில் உள்ள பாட்டிகளே கூறிவிடுவார்கள். வீட்டில் பெரியவர்கள் இல்லாதவர்கள் உங்கள் மருத்துவரிடம் வெளிப்படையாக பேசினால் அவர் தரும் ஆலோசனைகளின் படி உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.  

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க
Winter Skincare : முகத்திற்கு லெமன் ஜுஸ் தடவலாமா? குளிர்கால சரும பராமரிப்பு 'இது' முக்கியம்