மகளிர் நலன்: சிறுநீர் பாதை தொற்று பரவ காரணமாகும் டாய்லெட் சீட்..!!

By Dinesh TG  |  First Published Dec 4, 2022, 6:04 PM IST

இன்றைய காலத்தில் பெண்களிடையே சிறுநீர் பாதை தொற்று கணிசமாக அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இதற்கு டாய்லெட் சீட் முக்கிய காரண்மாக இருக்கலாம் என்கிற அச்ச உணர்வு மகளிரிடையே எழுந்துள்ளது.
 


பெரும்பாலான பெண்கள் பொது கழிப்பறையை பயன்படுத்த தயங்குகின்றனர். பலரும் பயன்படுத்தக்கூடிய கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருப்பதால், இந்த தயக்கம் பெண்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. அதனால், ஏதேனும் நோய்கள் வந்துவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஒருசிலர் சுகாதாரமற்ற கழிவறையை பயன்படுத்தும் போது சிறுநீர் பாதை தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அஞ்சுகின்றனர். 

மருத்துவர்கள் இது தேவையில்லாத பயம் என்று கூறுகின்றனர். அதாவது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு மிகவும் பொதுவான காரணம் சிறுநீரை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்வது மற்றும் நீரிழப்பு மட்டுமே என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். கழிப்பறை இருக்கையைப் பயன்படுத்துவதால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படலாம் என்கிற சந்தேகம் பல பெண்களிடையே நிலவுகிறது. அது உண்மையும் கூட என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

Tap to resize

Latest Videos

சிறுநீர் பாதை தொற்று மூன்று முக்கிய வழிகளில் கழிப்பறை இருக்கை மூலம் பரவுகிறது. கழிப்பறையை சுற்றியுள்ள பகுதிகள் சுகாதாரமற்று இருந்தால், டாய்லெட் சீட்டும் பாதிக்கப்படும். அதுமட்டுமில்லாமல், அந்தரங்க பாகங்களை சுத்தம் செய்ய டாய்லெட் பேப்பரை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். எப்போது சிறுநீர் அல்லது மலம் கழித்த பிறகு ஆசனவாயின் அருகிலிருந்து சிறுநீர் வெளியேறும் பகுதி வரை சுத்தமாக துடைக்க வேண்டும்

மாதவிடாய் ஏற்படும் போது யோகா செய்யலாமா?

சிறுநீர் கழித்த பிறகு காகிதத்தைப் பயன்படுத்தினால் எப்போதும் முன்னிருந்து பின்பக்கம் துடைக்கவும். அதேபோல, காகிதத்தின் எச்சங்கள் அந்தரங்க பாகங்களில் இருக்கக்கூடாது. அதனால் டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி முடித்ததும், அந்தரங்க பாகங்களை சற்று கைகளால் தடவி செக் செய்துகொள்ளுங்கள். 

சிலருக்கு சிறுநீர் அடங்காமை ஏற்படலாம். சிறுநீர் கவனக்குறைவாக அவர்களிடமிருந்து கழிப்பறை இருக்கைக்கு செல்லலாம். ஒருவேளை அந்த நபருக்கு சிறுநீர் பாதை தொற்று இருந்தால், அதையடுத்து டாய்லெட் சீட் மீது வந்து அமரும் மற்றொரு நபருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இவ்வகை நோய்த்தொற்றுகள் எளிதில் உடலுக்குள் புகுந்துவிடும்.

உடலின் இந்த பகுதிகளில் கொழுப்பு சேர விட்றாதீங்க..!! அப்பறம் வருத்தப்படுவீங்க..!!

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்தும் பெண்களிடையே இந்நோய் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இது 'பைலோனெப்ரிடிஸ்', 'சிஸ்டிடிஸ்' மற்றும் 'யூரித்ரிடிஸ்' போன்ற நோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஒருவேளை இந்நோய் பாதிப்புக்கு ஆளாகும் பெண்கள், கர்ப்பமாக இருந்தால் கிருமித்தொற்று வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனையும் பாதிக்கிறது.

பொதுக் கழிப்பறைகளுக்குச் செல்லும் போது, கழிவறை இருக்கையை தண்ணீரில் கழுவிடுங்கள். அதையடுத்து நீங்கள் சீட் மீது அமர்ந்து சிறுநீர் கழியுங்கள். அதையடுத்து நீங்களே ஒரு டிஷ்யூ பேப்பரை கைப்பையில் வைத்திருப்பது நல்லது. அதை, எடுத்து உங்களுடைய அந்தரங்கப் பகுதிகளை முழுமையாக சுத்தம் செய்யுங்கள். இதன்மூலம் சிறுநீர் நோய் பாதை தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது.
 

click me!