மட்டன் வைத்து மட்டன் சுக்கா,குழம்பு,கிரேவி, சூப் என்று இன்னும் பல விதமான ரெசிபிக்களை செய்ய இயலும். அந்த வகையில் இன்று நாம் மட்டன் ரெசிபிக்களில் ஒன்றான ஸ்பைசி அண்ட் க்ரிஸ்பியான மட்டன் சாப்ஸ் வீட்டில் சுவையாக எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சண்டே என்றாலே வேலைக்கு செல்பவர்கள்,பள்ளி செல்லும் குழந்தைகள் , மாணாக்கர்கள்,ஹோம் மேக்கர்கள் என்று அனைவரும் ஒரே குஷியாக இருப்பார்கள். அந்த ஒரு நாளில் மட்டும் தான் அவர்கள் அனைவரும் குடும்பமாக சேர்ந்து அமர்ந்து அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து சுவைத்து மகிழ்வார்கள்.
சண்டே என்றாலே அதிகமானோர் சிக்கன்,மட்டன்,மீன் என்று அசைவ உணவுகளை தான் அதிகமாக சமைத்து சாப்பிடுவார்கள். அசைவ பிரியர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு மட்டன் என்றால் போதும். தட்டில் வைத்ததை சத்தம் மில்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள்.
மட்டன் வைத்து மட்டன் சுக்கா,குழம்பு,கிரேவி, சூப் என்று இன்னும் பல விதமான ரெசிபிக்களை செய்ய இயலும். அந்த வகையில் இன்று நாம் மட்டன் ரெசிபிக்களில் ஒன்றான ஸ்பைசி அண்ட் க்ரிஸ்பியான மட்டன் சாப்ஸ் வீட்டில் சுவையாக எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
போன் லெஸ் மட்டன் - 8 பீஸ்கள்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
மைதா - 2 ஸ்பூன்
கடலை மாவு - 2 ஸ்பூன்
கார்ன் பிளார் -2 ஸ்பூன்
கரம் மசாலா - 2 ஸ்பூன்
காஷ்மீரி சில்லி பவுடர்- 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மட்டனை தண்ணீரில் நன்றாக அலசி விட்டு அதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா,அரிசி மாவு,கடலை மாவு, கார்ன் பிளார் போட்டு நன்றாக கிளறி விட வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி சில்லி பவுடர், கரம் மசாலா, உப்பு மற்றும் லெமன் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பின் அந்த பாத்திரத்தில் அலசி வைத்துள்ள மட்டன் பீஸ்களை போட்டு நன்றாக பிரட்டி வைத்து கிட்டதட்ட 5 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 5 மணி நேரம் பிறகு, ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து விட வேண்டும்.
தோசைக்கல் சூடான பின்,ஊறிய மட்டன் பீஸ்களை போட்டு சுமார் 15 நிமிடங்கள் வரை வேக வைத்து விட வேண்டும். பின் அதனை மறுபக்கம் திருப்பிப் போட்டு 15 நிமிடங்கள் வரை வேக வைத்து, பின் அடுப்பின் தீயை அதிகரித்து 3 நிமிடம் வேக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதாங்க சூப்பரான க்ரிஸ்பி மட்டன் சாப்ஸ் ரெடி!
(இதனை கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்தும் எடுக்கலாம்)