கறிவேப்பிலை சாதாரணமான ஒரு சமையல் பொருள் கிடையாது. அதை மூலிகை என்றே சொல்லலாம். உணவுக்கு சுவையூட்டுவதை தவிர்த்து, அது பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது.
தென்னிந்திய உணவுகளுக்கான அடையாளங்களில் ஒன்று கறிவேப்பிலை. இது சேர்க்கப்பட்ட எந்தவொரு உணவும் நம் வீட்டையும், நமது விருப்பமான உணவையும் நினைவுக்கு கொண்டு வரும். இதனுடைய நறுமணத்தில் ஒவ்வொவருடையை கடந்தகால வாழ்க்கை, அம்மா கைப்பக்குவம், தமிழ்நாட்டு உணவு, வீட்டு சாப்பாடு போன்ற நினைவுகள் அடங்கியுள்ளன. எனினும் இது உணவுகளில் நறுமணம் மற்றும் சுவைக்காக மட்டுமே சேர்க்கப்படுவதாக எண்ணுகின்றனர். இது ஓரளவுக்கு உண்மை என்றாலும், அது பாதி அளவு மட்டுமே. இதில் பல மருத்துவ குணங்கள் இடம்பெற்றுள்ளது என்பதே மீதமுள்ள காரணம். கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் பல்வேறு வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதயத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. கறிவேப்பிலையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. தற்போது நிலவி வரும் குளிர்காலத்தில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.
சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்
undefined
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் எப்போது கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எதையாவது சாப்பிட்டால், உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு கறிவேப்பிலை நல்ல மருந்தாக செயல்படுகிறது. ஏனெனில் இது நீரிழிவு நோயாளிகளின் உடலில் இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் கறிவேப்பிலையை தவறாமல் சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
வயிற்று வலி இல்லாமல் போகும்
கறிவேப்பிலை செரிமான அமைப்புக்கு நன்மை செய்யக்கூடிய பொருளாகும். அதனால் செரிமான பிரச்னை காரணமாக ஏற்படும் வயிற்று வலியை கறிவேப்பிலை குறைத்துவிடுகிறது. இந்த இலைகள் குடல் இயக்கத்திற்கும் உதவுகின்றன. இது செரிமான நொதிகளின் உற்பத்தியையும் ஊக்குவிக்கிறது. கறிவேப்பிலை குறிப்பாக வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குறைவதற்கான அற்புத சக்திகள் இடம்பெற்றுள்ளன
ஆணுறையை விட கருத்தடைக்கு 95 வரை பலன் தரும் பெண்ணுறைகள்..!!
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும்
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. அதை தடுப்பதற்கு கறிவேப்பிலை அவ்வப்போது சாப்பிட்டு வரலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கறிவேப்பிலையில், நல்ல கொழுப்பை உருவாக்கும் ஆற்றல்கள் உண்டு. அதனால் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
எடையை குறைக்க உதவுகிறது
தற்போதைய சூழலில் உடல் எடையால் பலரும் அவதியடைந்து வருகின்றனர். அதிக எடையுடன் இருப்பது மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. அதற்கு கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால், இதுபோன்ற பிரச்சனைகள் உங்களை அச்சுறுத்தாது. கறிவேப்பிலையின் இலைகள் செரிமானத்தை அதிகரிக்கிறது. இதனால், உடலில் சேரும் கொழுப்புக்கள் உருக ஆரம்பிக்கும். அதன்மூலம் விரைவில் உடல் எடையை குறைக்க உதவும்.
ஆரோக்கியம் நிறைந்திருக்கும் நெல்லிக்காயை சாப்பிடக்கூடாதவர்கள் இவர்கள் தான்..!!
முடியை காக்கும்
இன்றைய காலத்தில் இளைஞர்களுக்கு கூட வெள்ளை முடி வருகிறது. ஆனால் கறிவேப்பிலைக்கு முடி வயதாவதைத் தாமதப்படுத்தும் ஆற்றல் உண்டு. மேலும், இந்த கறிவேப்பிலை பொடுகை குறைக்கிறது. இது சேதமடைந்த முடியையும் குணப்படுத்துகிறது. பலவீனமான முடியை மீண்டும் வலிமையாக்குகிறது. இந்த இலைகள் முடி உதிர்வை நிறுத்துவதில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் முதல் மூன்று மாதங்களில் அடிக்கடி வாந்தி எடுப்பார்கள். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட கறிவேப்பிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுவையான கறிவேப்பிலையில் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. கறிவேப்பிலையை சர்க்கரை நோய், இதயம் தொடர்பான நோய்களால் அவதிப்படுபவர்களும், ஆரோக்கியமாகவும், நல்ல உடல் வளர்ச்சியும் பெற விரும்புபவர்களும் நன்மையையும் வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.