Pineapple: உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த இந்தப் பழத்தை சாப்பிடுங்கள்!

Published : Dec 05, 2022, 04:28 PM IST
Pineapple: உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த இந்தப் பழத்தை சாப்பிடுங்கள்!

சுருக்கம்

அன்னாசிப் பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.  

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கு சரிவிகித உணவு மற்றும் பழங்களை அதிகளவில் சாப்பிட வேண்டும். அன்னாசிப் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் குணங்கள் அதிகம் உள்ளது. இப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை அள்ளித் தருகிறது. அன்னாசிப் பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

அன்னாசிப் பழத்தின் நன்மைகள்

அன்னாசிப் பழத்தில் பொட்டாசியம் அதிக அளவிலும், சோடியம் குறைந்த அளவிலும் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அன்னாசிப் பழத்தை அடிக்கடி தாராளமாக சாப்பிட்டு வரலாம்.

நீரிழிவு நோய்

உடலில் உள்ள இரத்த குளுக்கோஸ் அல்லது இரத்த சர்க்கரை அளவுகள் மிகவும் அதிகமாக இருக்கும் நேரத்தில் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஆகவே, இரத்த சர்க்கரை அளவைத் தடுக்காத உணவைத் தேர்ந்தெடுப்பது தான், இப்படியான நாள்பட்ட நோயை இயற்கையாக கட்டுப்படுத்த உதவுகிறது. அன்னாசிப் பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மையை அளிக்கிறது.

பல ஊட்டச்சத்துக்கள்

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள அன்னாசிப் பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். உடல் எடையை குறைக்கவும் அன்னாசிப் பழம் பெரிதும் உதவுகிறது.

புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையான அன்னாசிப் பழத்தில் நார்ச்சத்து அதிகளவிலும், கலோரிகளின் அளவானது மிகவும் குறைந்தும் காணப்படுகிறது. இதன் காரணமாக விரைவாக பசி எடுக்காது. அது மட்டுமல்லாமல் இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

Water: தினந்தோறும் ஒருவர் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

வயிறு தொடர்பான பிரச்சனைகள்

வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் அன்னாசிப் பழம் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையையும் இப்பழம் தீர்த்து விடுகிறது.

அன்னாசிப் பழத்தில் வைட்டமின் A அதிக அளவில் உள்ளதால், கண்களுக்கும் நன்மை அளிக்கிறது. எலும்புகளையும் வலுப்படுத்துகிறது.

பற்களின் ஈறுகள்

பற்களின் ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அன்னாசிப் பழம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

மூட்டுவலி இருக்கும் நோயாளிகளுக்கு அன்னாசிப் பழம் மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஈறுகளில் உள்ள வீக்கத்தை குறைப்பதற்கு அன்னாசிப் பழம் மிகவும் உபயோகமாக இருப்பதாக கூறப்படுகிறது.   

PREV
click me!

Recommended Stories

Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க
Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க