Ginger pickle: குழந்தைகளுக்கு பசி எடுக்கவில்லையா? இந்த ஊறுகாய் செய்து கொடுங்கள்!

By Dinesh TG  |  First Published Dec 4, 2022, 8:49 PM IST

குழந்தைகளுக்கு பசி ஏற்படாமல் மந்தமாக இருக்கும் நேரத்தில், இஞ்சி ஊறுகாய் செய்து கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும். இஞ்சி ஊறுகாயை எப்படி தயாரிப்பது என இப்போது தெரிந்து கொள்வோம்.


இயல்பாகவே குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் பசி இருக்காது. குழந்தைகளின் வயிற்றுப் பகுதியில் சூடாக இருக்கும் நேரத்தில், மலச்சிக்கல் அல்லது செரிமானப் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இது போன்ற சூழலில் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது மிகுந்த  சிரமத்தை கொடுக்கும். 

இந்த சமயத்தில் மருத்துவரின் ஆலோசனைகளை கேட்பதை விடவும், வீட்டிலேயே இருக்கும் ஒருசில மூலிகைகளை கொண்டு ரசம், துவையல் மற்றும் சூப் போன்றவற்றை செய்து கொடுத்தால் நிரந்தரமான தீர்வை நம்மால் பெற முடியும். அவ்வகையில் குழந்தைகளுக்கு பசி ஏற்படாமல் மந்தமாக இருக்கும் நேரத்தில், இஞ்சி ஊறுகாய் செய்து கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும். இஞ்சி ஊறுகாயை எப்படி தயாரிப்பது என இப்போது தெரிந்து கொள்வோம்.

Tap to resize

Latest Videos

தேவையான பொருட்கள்

இஞ்சி – 1/4 கிகி

புளி – எலுமிச்சை பழ அளவு

வெல்லம் – 1/2 கப்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

கடுகு – 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

பெருங்காயம் – 1 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

Pirandai: நூற்றுக்கணக்கான நோய்களை குணப்படுத்தும் அதிசய மூலிகை: உடனே சாப்பிடுங்கள்!

செய்முறை

புளியை எடுத்து சுமார் 1 மணி நேரத்திற்கு முன்பாகவே, குளிர்ந்த நீரில் ஊற வைத்துவிட்டு, கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இஞ்சியை கழுவி, அதன் தோலை நீக்கி விட்டு, சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டில் கடுகு, பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கீறிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய இஞ்சி ஆகியஇரண்டையும் சேர்த்து நன்றாக கிளரி கொள்ள வேண்டும்.

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இந்த கலவையில் உப்பு மற்றும் மஞ்சள்தூளை சேர்த்து, புளிக்கரைசலையும் சேர்க்க வேண்டும். பிறகு, எண்ணெய் மற்றும் கலவையும் பிரிந்து வரும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும்.

10 நிமிடங்களுக்குப் பிறகு, சூடு ஆறியவுடன், மிக்ஸில் போட்டு அரைத்து எடுத்தால் இஞ்சி ஊறுகாய் தயாராகி விடும்.

முக்கிய குறிப்பு

துவையல் மற்றும் ஊறுகாய் போன்றவற்றை அம்மியில் அரைப்பதே சிறந்தது. சுவையும் இரட்டிப்பாக இருக்கும்.

click me!