சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்நீர் குளியல் பாதுகாப்பானதா அல்லது இந்த பழக்கம் நீரிழிவு நோயை ஆபத்தாக்குகிறதா என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.
பெரும்பாலானோர் குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதையே விரும்புகின்றனர். குளிர்ந்த நீரில் குளிப்பது மிகவும் கடினம். குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதால் உடல் சூடாகும். மேலும் சோர்வைப் போக்க உதவுகிறது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் வெந்நீரில் குளிக்கக்கூடாது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் சுமார் 7.7 கோடி பேர் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 25 மில்லியன் மக்கள் முன் நீரிழிவு நோயைக் கொண்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நீரிழிவு நோயின் அபாயகரமான விளைவுகளைப் பற்றி தெரியாமல் உள்ளனர்.
சக்கரை நோயாளிகள் வெந்நீரில் குளிக்கலாமா?
undefined
டைப்-2 நீரிழிவு நோயாளிகள் வெந்நீரில் குளித்தால், சில நன்மைகளைப் பெறலாம். சூடான குளியல் எடுப்பதன் மூலம் HbA1c அளவைக் குறைக்கலாம். HbA1c சோதனை கடந்த 2 முதல் 3 மாதங்களில் சராசரி இரத்த சர்க்கரை அளவை அளவிடுகிறது.
உங்களை ”மீண்டும்...” ”மீண்டும்...” சிப்ஸ் சாப்பிட தூண்டுவது இதுதானாம்..!!
நீரிழிவு நோயாளிகளின் கால்களுக்கு ஆபத்தானது
மிகவும் சூடான நீரில் குளிப்பது நீரிழிவு நோயாளிகளின் கால்களுக்கு ஆபத்தானது. மிகவும் சூடான நீரில் கால்களைக் கழுவுவது அல்லது ஊறவைப்பது சருமத்தை வறட்சியாக்கி விடும். இது பாதங்களில் காயம், தோல் உரிதல் அல்லது தொற்று அபாயத்தை ஏற்படுத்தலாம். அதே நேரத்தில், இந்த நடைமுறை கால்களின் தோலின் உணர்திறனையும் குறைத்துவிடுகிறது.
இன்சுலின் அளவு மோசமடையலாம்
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த இன்சுலின் ஊசி போட்டால், வெந்நீரில் குளிக்கும்போது கவனமாக இருக்கவும். ஏனெனில், வெந்நீர் இரத்த நாளங்களை தளர்த்தும். இதன் காரணமாக, இன்சுலின் வேகமாக உறிஞ்சப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இன்சுலினை அழித்து, ஊசியுடன் சூடான நீரும் சர்க்கரை அளவை மிகவும் குறைந்துபோக வாய்ப்புள்ளது.
வெதுவெதுப்பான நீர் போதும்
தோல் தொற்று, அரிப்பு மற்றும் சொறி, உலர்ந்த சருமம், தோல் அழற்சி, காயம் குணமடையும் தன்மை குறைவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகள் மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். மேலும் குளிப்பதற்கு முன் சருமத்தில் மாய்ஸ்சரைசரை தடவி குளித்த பின் கால்விரல்களுக்கு இடையில் டால்கம் பவுடரை தடவுவது நல்லது.