தொப்புளுக்கு அருகே வலி இல்லாமல் வீங்குவது 'அம்ப்ளிக்கல் ஹெர்னியா' எனும் குடல் இறக்க நோயால் தான் வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரிடத்திலும் இந்தப் பிரச்சனை காணப்படுகிறது. இருப்பினும், இந்த நோய் பெரும்பாலும் ஆண்களுக்குத் தான் அதிகமாக ஏற்படுகிறது.
நம்மில் சிலருக்கு சில நேரங்களில் தொப்புள் அருகே வீக்கம் ஏற்படும். இதனால் சில சமயங்களில் வலியும் உண்டாகும். இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபர்கள், இந்த வீக்கம் எதனால் ஏற்படுகிறது மற்றும் எதனால் வலி ஏற்படுகிறது என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் இருக்கின்றனர். இதனைப் பற்றி தெரிந்து கொண்டு தகுந்த சிகிச்சையை அளித்து விட்டால், தொப்புள் அருகே வீக்கம் மற்றும் வலியிலிருந்து உடனடியாக விடுபட முடியும்.
தொப்புள் அருகே வீக்கம்
undefined
தொப்புளுக்கு அருகே வலி இல்லாமல் வீங்குவது 'அம்ப்ளிக்கல் ஹெர்னியா' எனும் குடல் இறக்க நோயால் தான் வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரிடத்திலும் இந்தப் பிரச்சனை காணப்படுகிறது. இருப்பினும், இந்த நோய் பெரும்பாலும் ஆண்களுக்குத் தான் அதிகமாக ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அந்த காரணங்களை தெரிந்து கொண்டு, சரியான மருத்துவம் எடுத்தாலே போதும். வலியும், வீக்கமும் நம்மை விட்டு ஓடி விடும். அந்த வகையில் இப்போது இந்த நோயை தீர்க்க கூடிய சில எளிய சித்த மருத்துவங்களை இங்கே காண்போம்.
Cure Cancer: புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் அற்புத உணவுப் பொருள் இதுதான்!
வீக்கம் ஏன் ஏற்படுகிறது?
நம் வயிற்றுக்குள் உண்டாகும் வாயுவின் அழுத்தம், வயிற்றுத் தசைகளில் அதிகளவில் கொழுப்பு படிவது, உடல் எடை கூடுதல், நாள்பட்ட தொடர்ச்சியான இருமல், மலச்சிக்கல், மலத்தை முக்கி கழிப்பது மற்றும் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவது போன்ற சில காரணங்களால் குடலுக்கு முன்னே இருக்கும் தசைகள் வலுவிழந்து விடுகிறது. இதன் காரணமாக குடல் இறக்கம் ஏற்படுகிறது. குடல் இறக்கம் வந்தவுடன், சில பரிசோதனைகளின் மூலம் இது தானா என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு தான், இதற்கான தீர்வு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
தீர்க்கும் முறை