செரிமானம் சரியாக நடக்கவில்லை என்றால் பல்வேறு உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக, அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் அதிகரிக்கும். இவற்றைத் தடுக்க உதவும் சில உணவுப் பழக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
அஜீரணம் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் முக்கியமானது வயிற்று வலி. மிகக் கடுமையான வயிற்று வலி மற்றும் ஏப்பம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் உடனடியாக வரலாம். சிலருக்கு சாப்பிட்டவுடன் மூச்சுத் திணறல் ஏற்படும். சிலருக்கு குமட்டலும் ஏற்படலாம். இருப்பினும், சிலர் இந்த செரிமான பிரச்சனையின் ஒரு பகுதியாக நெஞ்செரிச்சல் மற்றும் மார்பின் ஒரு பகுதியில் வலியை அனுபவிக்கிறார்கள். செரிமானம் சரியாக நடக்கவில்லை என்றால், பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக இந்த குளிர்காலத்தில் செரிமான பிரச்சனைகள் மிகவும் பொதுவானவை. இதுபோன்ற சிரமங்களை மாற்ற உதவும் 5 இயற்கை வைத்தியங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
செரிமானம் சரியாக நடக்காவிட்டால்
செரிமானம் சரியாக நடக்கவில்லை என்றால், நீங்கள் எப்போதும் வயிறு வீங்கி, எதையும் சாப்பிட முடியாமல் இருப்பீர்கள். அதேபோன்று மலம் கழிப்பதும் சற்று சிரமமாக இருக்கும். அதனால் பைல்ஸ் போன்ற பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும். செரிமானம் சரியாக இல்லாதவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதோடு, கொழுப்பு மற்றும் தொப்பையும் ஏற்படுகிறது. எனவே, சரியான செரிமானம் அவசியம். இதை மாற்ற உணவில் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்
அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. நார்ச்சத்து இல்லாததால், அவை நமது செரிமான அமைப்புக்கு நல்லதல்ல. அதுமட்டுமின்றி, இத்தகைய உணவுகள் உடலுக்குச் சரியான ஊட்டச்சத்துக்களையும் வழங்குவது கிடையாது என பல்வேறு ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. இதை சாப்பிடுவதால் அமிலத்தன்மை அதிகரிப்பது மற்றும் செரிமானம் முறையாக நடக்காமல் போவது போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
நார்ச்சத்து நிறைந்த உணவு அவசியம்
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நமது செரிமான அமைப்பின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. நல்ல அளவு காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது செரிமானம் சீராகி வயிற்று கோளாறுகளை குறைக்கிறது. ஒழுங்கற்ற குடல் இயக்கம் உள்ளவர்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணத் தொடங்கினால், பிரச்னை விரைவில் குணமடையும். ஒரு நாளைக்கு குறைந்தது 8-11 நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உடலுறவுக்கு பிறகு தலைவலி வருகிறதா? எச்சரிக்கையாக இருங்கள்..!!
வயிற்று அமிலத்தின் அளவு அதிகரிக்கும் அபாயம்
நல்ல செரிமானத்திற்கு இரைப்பை அமிலத்தின் சரியான செயல்பாடு மற்றும் சரியான அளவு தேவைப்படுகிறது. அமிலம் குறைவாக இருக்கும்போது, செரிமானம் வேகமாக நடக்காது, இதனால் அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், தலைவலி மற்றும் சோர்வு ஏற்படுகிறது. வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்க எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. இதை அளவாக எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
கசப்பான உணவுகளை உண்ணுங்கள்
கசப்பான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக பப்பாளி, முட்டைக்கோஸ், கீரை, அத்துடன் மஞ்சள் ஆகியவை சரியான செரிமானத்திற்கு உதவுகின்றன. அதேபோல நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம். நாம் உண்ட உணவு சரியாக ஜீரணிக்க, தண்ணீர் நன்றாகக் குடிப்பதும் அவசியம். உடலை நல்ல நீரேற்றமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.