Viagra : பெண்களும் வாய்க்ரா மாத்திரை சாப்பிடலாமா?

By Dinesh TG  |  First Published Jan 18, 2023, 8:56 PM IST

சிலருக்கு தங்களுடைய செக்ஸ் வாழ்க்கை சாகசம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அதற்காக வயாகராவை எடுத்துக்கொள்கின்றனர். பாலியல் இன்பத்தை அதிகரிக்க வயாக்ரா பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர். ஆனால் இதன்மூலம் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 


உடலுறவு என்பது இயற்கையான செயல். உடலுறவு தம்பதியினரிடையே அன்பை மேலும் வலுப்படுத்துகிறது. ஒவ்வொரு நபரும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு இனப்பெருக்கத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். உடல் நலத்துடன், மன ஆரோக்கியத்திற்கும் உடல் உறவு தேவை பூர்த்தியாக வேண்டும். ஆனால் சிலருக்கு உடலுறவில் கிளர்ச்சி தேவைப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் சில மருந்துகளை சாப்பிடுவது, புதிய வழிமுறைகளை பின்பற்றி உடலுறவில் ஈடுபடுவது போன்ற காரியங்களை செய்கின்றனர். அதற்காக பரிந்துரைக்கப்படும் மருந்து தான் வயாக்ரா. இந்த சிறிய நீல மாத்திரை பல ஆண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உட்கொள்கின்றனர். ஆனால் பெண்களும் சில சமயங்களில் வயாக்ரா சாப்பிடுவதாக சொல்லப்படுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

வயாக்ரா பெண்களையும் பாதிக்குமா?

Tap to resize

Latest Videos

undefined

பெண்களுக்கு ஏற்படும் பாலுறவு உச்சக்கட்ட கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க வயாக்ரா பயன்படுத்தப்படுகிறது. படுக்கையில் திருப்தியாக இருப்பது எப்போதும் எளிதானது அல்ல. மிகவும் பொதுவான பெண் பாலியல் செயலிழப்புகளில் ஒன்று பாலியல் ஆர்வமின்மை மற்றும் உடலுறவு நாட்டம் இல்லாமல் இருப்பது போன்றவை ஆகும். பெண்கள் வயாக்ரா சாப்பிடுவதால் அவர்களுக்கு இந்த பிரச்னை தோன்றலாம். மேலும் அளவுக்கு மீறி சாப்பிடால், ஹார்மோன் மாற்றங்கள் அல்லது புற்றுநோய், நீரிழிவு அல்லது இருதய நோய் போன்ற அடிப்படை சுகாதார பிரச்னைகள் ஏற்படக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பாலியல் தூண்டுதல் பிரச்சனை உள்ள பெண்கள் வயக்ரா சாப்பிடலாமா?

பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது வயாக்ரா செயல்பாட்டில் ஒன்று. அந்த வகையில், அதிக உணர்திறன் மற்றும் மேம்பட்ட பாலியல் தூண்டுதல் இருக்கும். இருப்பினும், குறைந்த பாலியல் ஆர்வம் கொண்ட பெண்களுக்கு இது பயனளிக்காது என்று தான ஆய்வுகள் கூறுகின்றன. 

பெண்கள் வயாக்ரா சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன?

இந்த மாத்திரைகளை ஆண்கள் எடுத்துக்கொள்ளும் போது, அது ரத்தநாளங்களை விரிவுப்படுத்தும். அவர்களுடைய ஆண்குறிக்கு ரத்தம் ஓட்டம் அதிகரிக்கும். அதேபோன்று பெண்கள் வயாக்ரா சாப்பிடும் போது, அவர்களுடைய பிறப்புறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் பாய்கிறது. இது புணர்ச்சி செயல்பாடு, உணர்திறன் மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்க உதவுகிறது. எனினும் இதனால் பக்கவிளைவுகள் ஏற்படத்தான் செய்யும். மேலும் சில மருந்துகளுடன் தொடர்புகொண்டு நிலைமையை மேலும் மோசமாக்கலாம். பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, வயாக்ரா அல்லது பிற விறைப்பு குறைபாடு மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதால், தீவிரமான கண் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. வயாகராவைப் பயன்படுத்துவதால் தலைச்சுற்றல், தலைவலி, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் பார்வைக் கோளாறுகளும் நேரிடுகின்றன.

உடலுறவுக்கு பிறகு தலைவலி வருகிறதா? எச்சரிக்கையாக இருங்கள்..!!

பெண் பாலியல் செயலிழப்புக்கான சிகிச்சை முறைகள்

1. எந்த விதமான மனச்சோர்வு அல்லது சிகிச்சையளிக்கப்படாத கவலையும் பாலியல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். இதனால் உங்கள் துணையுடனான உறவு பாதிக்கப்படலாம். உணர்ச்சி அல்லது உளவியல் தடைகளுக்கு தனித்தனியாகவோ அல்லது இணைந்தேவோ தீர்வு காண முடியும்.

2. அறிகுறிகளைப் பொறுத்து, மேற்பூச்சு கிரீம்கள், யோனி மருந்துகள் அல்லது வாய்வழி ஹார்மோன்கள் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும். குறிப்பிட்ட ஹார்மோன்களை வழங்குவதன் மூலம், உடலில் ஹார்மோன் சமநிலை ஏற்பட்டு பிரச்னைக்கு தீர்வு தரும்.

3. உடலுறவின் போது ஏற்படும் வலியை வெவ்வேறு பாலியல் நிலைகளை பரிசோதித்தல், யோனி லூப்ரிகண்டுகளைப் பயன்படுத்துதல் அல்லது பாலியல் செயல்பாடுகளுக்கு முன் தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்தல் போன்ற பல்வேறு முறைகள் மூலம் தீர்க்க முடியும். 

4. தற்சமயம் மட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன, மேலும் பெண்களுக்கு ஏற்படும் ஹைபோஆக்டிவ் செக்ஸ் டிரைவ் பிரச்னைக்கு அவை தீர்வு தருகின்றன. மாதவிடாய் நின்ற பெண்கள் கூட இம்மருந்தை உட்கொள்ளலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
 

click me!