வாருங்கள்! க்ரன்ச்சி அண்ட் க்ரிஸ்பியான ஹனி சில்லி பொட்டேட்டோ ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு வைத்து எந்த ரெசிபி செய்தாலும் அனைத்தும் காலி ஆகிவிடும் செய்து முடித்த அடுத்த நொடி பொழுதில். உருளைக்கிழங்கு வைத்து பொரியல், பொடிமாஸ், மசாலா, கிரேவி,பிரெஞ்சு ப்ரைஸ் என்று பல விதங்களில் சமைக்கலாம். அந்த வகையில் இன்று நாம் ஹனி சில்லி பொட்டேட்டோ ரெசிபியை காண உள்ளோம்.
இதனை சிறு குழந்தைகள் , பெரியவர்கள் என்று அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவார்கள். மீண்டும் வேண்டும் என்று கேட்டு வேங்கை சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை மிக ஆபாரமாக இருக்கும்.
undefined
வாருங்கள்! க்ரன்ச்சி அண்ட் க்ரிஸ்பியான ஹனி சில்லி பொட்டேட்டோ ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஃப்ரை செய்வதற்கு:
வதக்குவதற்கு:
சாஸ் தயாரிப்பதற்கு:
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்குகளை பிரெஞ்சு ப்ரைஸ்க்கு வெட்டிக் கொள்வது போல் நீட்ட நீட்டமாக கட் செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி வெட்டிய உருளைக் கிழங்குகளை போட்டு அரை வேக்காடாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் மைதா மாவு சேர்த்துக் கொண்டு அதில் வெந்த உருளைக்கிழங்குகளை போட்டு நன்றாக பிரட்டி எடுத்துக் கொண்டு சுமார் 7 மணி நேரங்கள் வரை ஃப்ரீசரில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு பவுலில் அரிசி மாவு ,மைதா,மிளகு தூள் ஃபுட் கலர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பின் சிறிது தண்ணீர் ஊற்றி திக்கான பேட்டராக செய்து கொள்ள வேண்டும். 7 மணி நேரத்திற்கு பிறகு ஃப்ரீசரில் இருந்து கிழங்குகளை எடுத்து இந்த கலவையில் சேர்த்து மெதுவாக பிரட்டி விட்டு சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, தீயினை சிம்மில் வைத்துக் கொண்டு கிழங்குகளை போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதே கடாயில் அரிந்து வைத்துள்ள வெங்காயம், கேப்ஸிகம்,தக்காளி ஆகியவற்றை சேர்ந்து 2 நிமிடம் மட்டும் வதக்கி கொண்டு அதில் மிளகுத்தூள் மற்றும் அனைத்து சாஸ் வகைகளையும் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ள வேண்டும்.
இப்போது இதில் பொரித்து வைத்துள்ள கிழங்கு ப்ரைகளை சேர்த்து டாஸ் செய்து விட்டு இறுதியாக ஹனியை சுற்றி சிறிது ஊற்றி சிறிது வெள்ளை எள்ளை தூவினால் ஹனி சில்லி பொட்டேட்டோ ரெடி!